(Reading time: 16 - 31 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

சந்தேகத்தை கிளப்பி விட்டியே… ரஞ்சன் உள்ளுக்குள் குமுறினான்.

"பாத்தீங்களாஅந்த பொண்ணு என்ன சொல்லுதுனுஇந்த ஆளு கல்பிட்ட பேசியிருக்கான். அவளை மயக்க பார்த்திருக்கான்" என்று சொல்லவும் தாத்தா கடுப்பாகி விட்டார்.

"மயக்க பார்க்கிறானா? இப்ப உண்மை புரிஞ்சிட்டதாஉன்னோட கல்பி என் பேரன் பின்னாடி ஓடி வந்துடாமல் கட்டி வை… " சுள்ளென்று சொல்லஅவன் அவரை முறைக்கவும்

"அல்லது கல்யாணம் கட்டிக்கோ…  இந்த ஒரே விஷயத்திற்காக எத்தனை பேர்கிட்ட சண்டை போடுவாய்?"

கல்யாணம் என்று சொன்னதும் மாரப்பன் தடால் என்று ப்ரேக் பிடித்தான். அது அவனுடைய மானப்பிரச்சினை ஆகி விடுமே!.

"ஆங்அது கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்குதே…" மாரப்பன் அலுத்துக் கொண்டான். தாத்தா சொன்னதுல ஒரு விஷயம் சரிதான்கல்பியை கல்யாணம் செய்யும்வரை இப்படி நடக்கும்தான்

"அதை சரி பண்ணு. இல்லேனால் யாரு அவளுடன் பேசினாலும் உனக்கு சந்தேகம்தான் வரும். முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பு…" அவனை துரத்தி விட்டார்.

"பிரச்சினை முடிஞ்சிருச்சுஎல்லோரும் அவங்க அவங்க அறைக்கு போங்க" உத்தரவிட்ட தாத்தாசத்யனிடம்

"நீ ஒரு விஷயத்தை புரிஞ்சிக்கணும்"

"இது கிராமம்இந்த மாதிரி பொண்ணுங்க கிட்ட பேசக் கூடாது…." அவன் பதில் சொல்ல..

"இல்லைஒளியத் தெரியாமல் தலையாரி வீட்டிலே போய் ஒளியக் கூடாது.."

அவன் '@4#$%' என்று பார்க்க

"ப்ச்ரேச்சலை சாட்சியாக கூப்பிட்டதை தாத்தா சொல்கிறார்." ரஞ்சன் எடுத்து கொடுத்தான்.

"சாரி தாத்தா" என்று சத்யன் சொல்லவும் அவனுடைய கையை பிடித்து இழுத்துக் கொண்டு ரஞ்சன் தன் அறைக்கு சென்றான்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காஅந்த ரேச்சல் உன்னை சப்போர்ட் பண்ணுவாள்னு எப்படி நினைச்சேஅது சரிஅந்த கல்பிப்ச்.. அந்த கல்பனாவிடம் உனக்கென்ன பேச்சு. அந்த ரேச்சலை வெறுப்பேற்றதானே செய்தாய்.."

சத்யன் வாயே திறக்கவில்லை…

"அந்த பொண்ணுட்ட இருந்து விலகி நில்லுனு சொன்னேன். கேட்டியா?. அவள் உன்னை விரோதியாகதான் பார்க்கிறாள் என்றபோது அவளிடம் எப்படி சாட்சி கோரினாய்…"

"அதுஅட் எ சடன் அவளை கால் பண்ணிட்டேன்யோசிக்கலை"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.