"இவன் ஏதோ உன்னிடம் பஞ்சாயத்து செய்கிறான். இவன் கல்பனாவின் முறைமாமன். அவளிடம் நீ ஏதோ பேசினாயாம். என்னவென்று சொல்லு" என்று தாத்தா சொன்னார்.
சத்யன் அந்த விஷயத்தை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. மாரப்பன் வேறு விஷயமாக எதையாவது கேட்க வந்திருப்பான் என்று சகஜமாக அவனை பார்த்து,
" என்ன விஷயம் என்னவென்று சொல்லுங்கள்" என்று கேட்டான்.
" என்ன சொல்வது?" என்று மாரப்பன் ஆரம்பிக்கவும்… அந்த தொணியிலிருந்த இளக்காரம் அவனை யோசிக்க வைத்தது.
அவன் அவளை முறைத்துப் பார்க்கவும்... மாரப்பன்,
" என்ன அப்படி பார்த்தால்... பண்ற தப்பை எல்லாம் மறைக்கலாம்னு என்று நினைக்கிறாயா?" என்று கேட்கவும் சத்யனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது.
' நான் உங்களிடம் மரியாதையா தானே பேசுகிறேன். நீங்கள் அது போல என்னிடம் மரியாதையாகத்தான் பேச வேண்டும். அப்போது தான் தகுந்த மரியாதை கிடைக்கும்" என்று சொன்னான்.
"என்ன மிரட்டுறியா?. மரியாதையானா என்ன... மரியாதை இல்லை என்றால் எப்படி நடந்து கொள்ளுவியாம்" என்று அவன் மேலும் மேலும் பேசிக் கொண்டே சென்றான்.
"தேவையில்லாமல் பேச வேண்டாம். என்ன விஷயம் சொல்லுங்கள்' என்று ரஞ்சன் கேட்டான்.
" நீ கேட்கிறாயா?. அதனால நான் சொல்றேன். ஏன் ஒரு பொண்ணு தனியா ஒரு இடத்தில நிக்க கூடாதா…?. மழைக்கு பயந்து அந்த பிள்ள ஒதுங்குனாளாம். அவகிட்ட இந்த ஆளு என்ன என்னவோ பேசி இருக்கான். என்னன்னு கேளு. ஊருல உலகத்துல பொம்பளைங்க தனியாக கூட போக முடியாதா… இந்த ஊர்ல இருக்க முடியாதா… அந்த அளவுக்கு இந்த ஊர் மோசமா போயிருச்சா?" என்று கத்த ஆரம்பித்தான்.
அடடா என்ன இது ஏன் இப்படி கத்துகிறான்! என்று ரஞ்சன் பொறுமை இழந்து போய் கேட்டான்.
" இந்த ஆளு என்னோட கல்பிகிட்ட கொஞ்சியிருகாரு. கோழி குழம்பு வைத்த கைக்கு தங்க வளையல் போடலாம் என்று சொல்லி இருக்கான்"
அதைக் கேட்கவும் சத்யன் திடுக்கிட்டான். 'என்னது… நாம் பேசியது வேற.. இவன் சொல்லுவது வேறு... இவன் திரித்து பேசுகிறானா இல்லை அந்த கல்பனா திரித்து எதையும் சொல்லி விட்டாளா?' என்று யோசித்தான். அநியாயமாக அவனுடைய பெயர்தான் சிக்கலில் மாட்டிக்