"இனிமேல் யோசி… ஏன் இப்படி பிஹேவ் செய்கிறாய்னு யோசி… ஸ்டே அவே"
"ம்… இனி கவனமாக இருப்பேன்." சத்யன் தன் அறைக்கு சென்று விட்டான்.
மறுநாள்..
சத்யனுக்கு அலுவலகம் கிளம்பும்போது ஒரு எண்ணம் தோன்றியது… அதை காரில் செல்லும் போது ரஞ்சனிடம் கூறினான்.
"நாம இன்னிக்கு ஈவ்னிங் வீட்டுக்கு போகலாமா?"
"ஈவ்னிங் வீட்டுக்கு போகத்தானே வேண்டும்"
" நான் நம்முடைய வீட்டை சொன்னேன்'
"தாத்தா வீட்டுக்கு போய் ஒரு வாரம் ஆகி இருக்குமா… அதுக்குள்ள வீட்டு நினைவு வந்திட்டதா?"
"அப்படி இல்லை… மீராவின் நினைவு வந்துச்சு. அங்கே போனால் அவளை பார்த்ததுபோல இருக்கும்"
"எப்படி டியர்?. மீரா அங்கு வந்திருப்பாள் என்று நினைக்கிறாயா?" கேலியாக கேட்டான்.
"அட… அந்த வீட்டில் மீரா சம்பந்தப்பட்ட பொருட்கள் நினைவுகள் இருக்கிறது. அதை பார்த்தால் மனசுக்கு நிம்மதியாக இருக்கும்."
சத்யனின் முகத்தை பார்க்க ரஞ்சனுக்கு சங்கடமாக இருந்தது. சும்மா இருந்தவனை தேவை இல்லாததை பேசி சீண்டி விட்டோமோ என்று தோன்றியது. ரேச்சல் உடன் அவன் போட்ட சண்டையை நிறுத்த கண்ணு மூக்கு காது வைத்து பேசப்போக… அவனுக்கு பிரியசகியின் நினைவு வந்து விட்டதோ?
"வெல்… இன்னிக்கு சைட் இன்ஸ்பெக்ஷனுக்கு போகணும்.நான் உன்னை இப்படியே வீட்டில் இறக்கி விட்டுட்டு அங்கே போறேன். இரண்டு மணி நேரத்தில் இன்ஸ்பெக்சனை முடித்து விட்டு வந்து விடுகிறேன். அப்புறம் ஆபீஸுக்கு போகலாம்." என்று திட்டமிட்டான்.
சொன்னது போலவே சத்யனை வீட்டில் இறக்கி விட்டான். டாஷ் போர்டில் இருந்த சாவி கொத்தை தந்தான்.
"ஓகே ரஞ்சன் யூ கேரி ஆன்" சத்யன் சொல்ல..
"நீ இங்கே இரு. நான் வந்துடுவேன். ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதே" என்று சொல்லி கிளம்பினான்.
வீட்டிற்குள் காலை வைக்கவுமே… மீராவின் கொலுசு ஒலிக்கும் ஓசை காதில் அடி பிசகாமல் கேட்க ஆரம்பித்தது.