கேட்டான்.
"மழை பெய்தப்போ… பஸ் ஸ்டாண்டுல பார்த்தேன்"
சத்யனுக்கு அப்பாடா என்றிருந்தது. ஒரு வேகத்தில் அவளை அழைத்து விட்டானே தவிர… அவள் உண்மையை சொல்வாளா என்ற சந்தேகம் அடி மனதில் உதித்திருந்தது…
"ரெண்டு பேரும் என்ன பேசினாங்க தெரியுமா?" அடுத்த உப்புமா கேள்வியை மாரப்பனுக்காக ரஞ்சன் கேட்டு வைத்தான்.
"ஆங்… இந்த ஆளு சிரிச்சு கிரிச்சு பேசினானா?" மாரப்பன் துணை கேள்வி கேட்டான்.
இப்போது ரேச்சலுக்கு புரிந்து விட்டது… இந்த மாரப்பன் சத்யனை சந்தேகிக்கிறான். கல்பியுடன் அவன் தவறாக பேசிக் கொண்டு இருந்ததாக நினைக்கிறான். அது தவறான எண்ணம் என்று அவள் சொன்னால் பிரச்சினை முடிந்து விடும்.. அதுதான் உண்மையும்கூட.. ஆனால்...
ம்… அவள் ஏன் அவனுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும்…?. உண்மையில் அவன் கல்பியிடம் எதற்கு பேசினான்… சத்யன் ஒரக் கண்ணால் அவளை பார்த்தபடி பேசியது நினைவிற்கு வந்தது. அவளை சீண்டி இருக்கிறான்… கல்பியிடம்கூட தன்மையாக பேசுவானாம் ஆனால் ரேச்சலை அவமானப்படுத்துவானாம்…
சாதாரணமாக பேசிகிட்டாங்க… என்று சொல்வதா அல்லது அப்படி இப்படி பேசினாங்க என்று ரெண்டு பிட் சேர்த்து சொல்லலாமா...அவ்ள யோசித்தாள்.
சே… அவனுக்காக அவள் தரம் இறங்க கூடாது. உண்மையை சொல்வதுதான் மனசாட்சியை மதிக்க தெரிந்த நேர்மையான முடிவு. ஆனால்… அப்படி சொன்னால் அவனால் அவமானப்பட்ட அவளுடைய பிஞ்சு மனம் வேதனையுறுமே… அச்சோ…
ஓகே… அவள் ஒரு முடிவிற்கு வந்து விட்டாள்.
"அண்ணா… அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தது விஸ்பரிங்காக கேட்டது. அதனால . அவங்க என்ன பேசினாங்கனு எனக்கு தெரியாது.. அதோட அந்த இடம் கொஞ்சம் இருட்டு சூழ ஆரம்பித்தால அவங்களை சரியாக கவனிக்கவில்லை. நான் பஸ் ஸ்டாப்போட மறுமுனையில இருந்தேன். அம்மா தேடுவாங்க நான் கிளம்பறேன்" அவள் சத்யனை ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினாள்.
அவ்வளோதான்… பாம்புக்கு அடி தந்ததுபோல ஆயிற்று… கம்பும் முறியாமல் காப்பாற்றியாச்சு… அவனுக்கு ஆதரவாகவும் சொல்லவில்லை.. எதிராகவும் சொல்லவில்லை.. ஆனால் உண்மையைதான் சொன்னாள்...
அடிப்பாவி… அவங்க அமைதியாக பேசிட்டுதான் இருந்தாங்கனு முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே… நான் கேட்கலை பார்க்கலைனு இருட்டுல இருந்தாங்க அப்படினு