திருப்பி கொண்டாள்.
அப்போது அதே மழையில் நனைந்தபடியே கல்பியும் தன்னுடைய வண்டியில் வந்தாள். அவள் வண்டியை நிறுத்திவிட்டு ரேச்சல் அருகில்தான் வந்து நின்று இருக்க வேண்டும். அங்கே ரேச்சல் நிற்பதை பார்க்கவும் படக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டு ஆண்கள் நிற்கும் பகுதிக்கு சென்று விட்டாள்.
அதை பார்த்த ரேச்சல் 'என்ன ஒரு திமிர்?' என்று உள்ளுக்குள் கொதித்துக்கொண்டு இருந்தாள். அங்கு ஆண்கள் இருக்கும் பகுதிக்கு சென்ற கல்பி முகம் பளிச்சிட்டதை அந்த மெல்லிய வெளிச்சத்தில் கூட ரேச்சலால் ஊகிக்க முடிந்தது. எவ்வளவு மோசமான பெண்ணிவள்! என்று இன்னும் அலுத்து கொண்டாள்.
ஆனால் சத்யனும் கொஞ்சமும் சளைத்தவன் அல்ல. அவனுக்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. கல்பியை போட்டு வாங்கப் போகிறான் என்று அவள் காத்திருந்தாள். ஆனால் அங்கு நடந்ததே வேறு...
"என்ன சார் மழைக்காக ஒதுங்கி இருக்கீங்களா?" என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்த கல்பியை முதலில் அவன் வெறுமையாகதான் பார்த்தான். அவளுக்கு பின்னே ரேச்சல் நின்றிருப்பதை பாரக்கவும்… அவனுக்கு நொடிப் பொழுதில் ஒரு யோசனை தோன்றியது.
இந்த கல்பியைத்தானே பிடிக்காது என்று ரேச்சல் சொன்னாள். இப்பொழுது அவளிடம் பேசினால் ரேச்சலை சீண்டியது போல இருக்கும். பார்க்கலாம்... அவள் என்ன சொன்னாள்?.. பெண்களையே மதிக்க தெரியாதவன் என்றாள் அல்லவா.. அவன் கல்பியிடம் பேசுவதை பார்த்து தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அவன் ரேச்சலை மட்டுமே மதிக்க மாட்டான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவன் கல்பியை பார்த்து சிரித்தபடி பேசினான். உரக்க பேச ஆரம்பித்தாலும் சில வார்த்தைகளை வால்யூம் குறைத்து பேசினான். அவ்வப்போது ரேச்சலை பார்த்துக் கொண்டு வேறு பேசினான்.
அது ஒரு.வகையான சம்பாஷனை… நம்மை பற்றிதான் பேசுகிறார்களோ என்று தொலைவில் உள்ளவர்களை குறுகுறுக்க வைக்கும்.
"சார் அன்னிக்கு சாப்பாடு எப்படி இருந்துச்சு…?"
"சூப்பர்"... அவன் எங்கே சாப்பிட்டான்…? அதைதான் ரேச்சல் தட்டிவிட்டாளே… இருந்தாலும் எதையாவது பாஸிட்டிவாக சொன்னால்தான் அவள் முகம் மலரும்… அவ்விடம் மனம் குமுறும். ரேச்சல் ரொம்பவும் நினைப்பு உள்ளவள் அல்லவா! கல்பி மாதிரி ஒரு சாதாரண பெண்ணிடம் இனிமையாக அவன் பேசுவதை பார்த்தால் காற்று இறங்கிய பலூன்போல அவள் முகம் டல்லடிக்கும்…