(Reading time: 16 - 31 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

கொண்டது போலியே..

"கொஞ்சம் பொறுமையா பேசு. எந்த இடத்தில இந்த சம்பவம் நடந்தது என்று சொல்கிறாய்…? என்னோட மச்சான் ஆபீஸ்ல இருந்து நேரா வீட்டுக்கு வந்துட்டான்." ரஞ்சன் சொல்ல..

" இல்ல இல்ல வீட்டுக்கு வரல. இடையில ஒரு பஸ் ஸ்டாப்ல ஒதுங்கி இருக்காங்க. மழை ரொம்ப பெருசா பெய்துச்சாம். அப்போ என் கல்பியும் அங்க போய் இருக்காள். அவள் கிட்ட இவன் தாறுமாறா பேசி இருக்கான்" என்று சொன்னான்.

 ரஞ்சன் சத்யனை பார்த்து "இது என்ன சிக்கல்?" என்று கேட்டான்.

" நான் பஸ் ஸ்டாப்பில் ஒதுங்கியது உண்மை. அவளிடம் பேசியது உண்மை. ஆனால் தாறுமாறாக எல்லாம் பேசவில்லை. அன்றைக்கு நம் வீட்டிற்கு   சாப்பாடு கொண்டு வந்தாள் அல்லவா... அதை பற்றி கேட்டாள். நான் நன்றாக இருந்தது என்று சொன்னேன்"

" நீ பேசினதை  மட்டும் ஒத்துக்கிற. ஆனா அவ கிட்ட தப்பா பேசினதை  ஒத்துக்க மாட்டேன் என்கிற பாரு." என்று மாரப்பன் கத்தினான்.

 அந்த சமயத்தில் ரேச்சல் அங்கு வந்தாள். அவள் நந்தினியுடைய ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்டை தர வேண்டி இருந்ததால் அங்கு வந்தாள். அவள் வந்த பொழுது கூட அங்கு நடந்ததை கவனிக்கவில்லை. அவள் தன் வேலையை பார்த்துக் கொண்டு போயிருப்பாள். ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் சத்தியன்தான் அவளை சாட்சிக்கு அழைத்தான்.

" இங்கே வாங்க ரேச்சல்" என்று கூப்பிட்டான்.

 அவளுக்கு ஆச்சரியமான ஆச்சரியம் 'என்னடா இது இவ்வளவு மரியாதையாக அழைக்கிறான்' என்று யோசித்தபடி அவளும் அந்த இடத்தில் வந்து நின்றாள்.

" அங்கு நானும் கல்பனாவும்  மட்டும் இருக்கவில்லை. இவர்களும் இருந்தார்கள். இவர்களிடம் என்ன நடந்தது என்று கேள். நான் கல்பனாவிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. அதற்கு இவர்கள்தான் சாட்சி"

அப்போதுதான் அந்த விஷயத்தை ரேச்சல் கவனிக்க ஆரம்பித்தாள். ஆஹாங்முக்கியமாக ஏதோ படம் ஓடுது போலியே…!

"ரேச்சல் இவர் கல்பனாவுடன் பேசிக் கொண்டு இருந்தபோது நீங்கள் அங்கிருந்தீர்களா" ரஞ்சன் கேட்டான்.

அவனுக்கு அலுப்பாக வேறு இருந்தது. இது ஒரு பஞ்சாயத்து…  இதற்கு சாட்சி வேற இழுக்கனுமா? இதுவே சிட்டியாக இருந்தால் இவ்வளவு பேசவே தேவையில்லை. அது பற்றி கல்பனாதான் பேச வேண்டும் என்று துரத்தி விட்டிருப்பான். இது கிராமமாக போய்விட்டதுதாத்தா வேறு பிரச்சினையை சால்வ் பண்ண சொல்கிறார்ரஞ்சன் அசிரத்தையாக ரேச்சலிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.