(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

“முதல்ல அப்படித்தான் இருக்கும் மைத்தி... போக போக பழகிடும்....”

“கோச்சும் அதுதான் சொன்னார்... இன்னைக்கு உனக்கு காலேஜ் சீக்கிரம் முடிஞ்சுடுத்தா... தினம் என்னை கூட்டிண்டு போக மாமா இல்லைன்னா பத்ரிண்ணா தானே வருவா....”

“ஆமாம் இன்னைக்கு இன்ஸ்டிடியூட் போகலை... நாளைல இருந்து சாயங்காலம் புதுசா ஒரு வேலைல சேரப்போறேன்... மாம்பலத்துல வேலை... அதுக்கு போயிட்டு ஆத்துக்கு வரப்பவே ராத்திரி ஆயிடும்... அதுதான் இன்னைக்கு உன்னைக் கூப்பிட வந்தேன்...”

“அப்போ இன்ஸ்டிடியூட் எப்படி போவ... அதை விட்டுட்டியா...”

“இல்லைடி குட்டி.... காலம்பற மட்டும் வரேன்னு சொல்லி இருக்கேன்...”

“இப்படி எல்லா இடத்துக்கும் அலைஞ்சா எப்போ படிப்ப ரகுண்ணா... நேரமே இருக்காதே....”

“அதெல்லாம் படிச்சுடலாம்டா குட்டி... காலேஜ்ல நிறைய ப்ரீ பீரியட் இருக்கு... அதுவும் தவிர ஆடிட்டர் கிட்ட தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்.... வேலை செஞ்சுண்டே படிச்சுடுவேன்... தவிர பஸ்ல போகும்போதும் வரும்போதும் நிறைய நேரம் இருக்குமே.... அதெல்லாம் உபயோகப்படுத்திக்க வேண்டியதுதான்... காலேஜ் இன்னும் ஒரு வருஷம்தானே.... ஓடிப் போய்டும்...”

“ஹ்ம்ம் ரொம்ப கஷ்டப்படுத்திக்காதேண்ணா....  நான்தான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்...”

“அதெல்லாம் மிஸ் பண்ண மாட்ட... வாரக் கடைசி முழுக்க உங்க எல்லார் கூடவும்தான் இருக்க போறேன்... அன்னைக்கு வேலை, இன்ஸ்டிடியூட் ரெண்டுத்துக்கும் வர மாட்டேன்னு சொல்லிட்டேன்....”

“ஐ ஜாலி... அப்போ இனி சண்டே எங்களோட எல்லா வாரமும் நீ பீச்சுக்கு விளையாட வரணும்...”

“அது பார்க்கலாம்டா.... சரி அங்க விளையாட வர்றவாள்லாம் எப்படி... நன்னா பழகறாளா...”

“பசங்கதான் நிறைய பேர் எங்க செட்.... கேர்ள்ஸ் மூணு பேருமே உன்னை மாதிரி காலேஜ் படிக்கறவா... எங்களோட பேசவே மாட்டா... வருவா... விளையாடுவா... கிளம்பிடுவா... பசங்களும் அவாளுக்குள்ளதான் பேசிப்பா... நானும் துளசியும்தான் தனியா இருப்போம்... எங்களுக்குள்ள மட்டும் பேசிப்போம்....”

“இப்போதானே சேர்ந்திருக்கேள்... அதான்... போக போக பழகிடுவா... அவா பேசாட்டாலும் பரவாயில்லை... நீங்களே போய் பேசி பிரின்ட் ஆயிடுங்கோ.... அவாள்லாம் ரொம்ப நாளா கத்துக்கறவா... அன்னைக்கு உன்னோட கோச் சொல்லிண்டு இருந்தார்... அந்த மூணு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.