(Reading time: 9 - 17 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

பொண்களுமே  அவா காலேஜ் டீம்ல விளையாடறாளாம்...  பசங்களும்  வெளில மேட்ச் எல்லாம் விளையாடறவா... அவாக்கிட்ட இருந்தெல்லாமும் நிறைய கத்துக்கலாம்...”

“சரிண்ணா கண்டிப்பா பேசறேன்...”, இருவரும் பேசியபடியே வீடு வந்து சேர்ந்தார்கள்...

   

“என்னடி ப்ராக்டிஸ் எப்படி போச்சு இன்னைக்கு....”

“செம்மம்மா... கோச் பெண்டு எடுத்துட்டார்... பயங்கரமா பசிக்கறது.... என்ன பண்ணி வச்சிருக்க...”

“போன வாரமெல்லாம் போறடிக்கறதுன்னே... இப்போ இந்த கம்ப்ளைன்ட்...  போய் மொதல்ல குளிச்சுட்டு வா... பாட்டி உனக்கு அரிசி உப்புமா பண்ணி வச்சிருக்கா... வந்து சாப்பிடு...”

“பாட்டின்னா பாட்டிதான்.... நேக்கு பிடிச்சதை பண்ணி வச்சிருக்கா பாரு...”

“நாளைக்கு உனக்கு டெஸ்ட் இருக்கே... படிச்சுட்டியா...”

“அதெல்லாம் எப்பவோ படிச்சாச்சும்மா...”, குளித்து வந்து இரவு உணவை முடித்த மைத்தி தன் பாட்டியுடன் படுக்க சென்றாள்...

“வாடா கோந்தே... உப்புமா சாப்டயா.... நன்னா இருந்துதா....”

“உன்னோட உப்புமாவ அடிச்சுக்க ஆளே இல்லை பாட்டி... அது எப்படித்தான் இப்படி பன்றயோ... அதுவும் அந்த வெங்கலப்பானைல அடி இருக்கும் பாரு... அதுக்கு நான் என்னோட சொத்தையே எழுதி வச்சுடுவேன் பாட்டி....”

“அப்படி எந்த சொத்தும் உன் பேர்ல இல்லைங்கற தைரியத்துல சொல்லறியாக்கும்...”

“கரெக்டா கண்டுபிடிச்சுட்ட பாட்டி...”,அசடு வழிந்தபடியே சொன்னாள் மைத்தி...

“சரி மைத்தி.... பாட்டி அந்த அலமாரில ஒரு கவர் வச்சிருக்கேன் பார்... அதை எடுத்துண்டு வா...”

“என்னது பாட்டி...”

“எடுத்துண்டு வாடி...”, மைத்தி சென்று எடுத்து வர, மைத்தியின் கண்ணை மூடிய பாட்டி அவள் மடியில் கவரை பிரித்து அதன் உள்ளிருந்ததை வைத்தார்...

பாட்டி கையை எடுத்தவுடன் தன் மடியைப் பார்த்த மைத்தி சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய்விட்டாள்...

“ஹே பாட்டி... என்னதிது.... வெள்ளை கலர் பேன்ட்டு, சட்டை நேக்கா....”

“நோக்கேதாண்டி கோந்தே... உன் மாமா பசங்களோட பேன்ட் நோக்கு சரியாவே இல்லைன்னு அங்க அங்க பின்னை குத்திண்டு கஷ்டமா இருக்கு பாட்டின்னு ஒரு வாரமா புலம்பிண்டே இருந்தியோன்னோ, அதுதான் நானே துணி வாங்கிண்டு வந்து தச்சுட்டேன்... சரியா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.