(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

அணிந்த மாங்கல்யமே அப்பெட்டகத்துள் மறை்திருந்தது.

"இது உரிய இடத்துக்கே திரும்ப வந்துடுச்சு!" என்று பெருமூச்சோடு அருகிலிருந்த மேசை மீது அப்பெட்டகத்தினை வைத்தவனாய், அமைதியாக வெளியேறி கதவினை மூடினான் அசோக்.மனம் முழுதும் இலகுவாக, அமைதியோடு தனதறைக்கு வந்தான் அவன். நிசப்தமான அறையுள் மெல்ல அவன் எட்டிப்பார்க்க, அறை முழுதையும் இருளாக்கி, ஒரு போர்வைக்குள் புகுந்தவளாய் அவனடி மடிக்கணினியில் எதையோ கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தாள் சிவன்யா. அவள் இமைக்காமல் அதனை நோக்கும் தொனியிலே கண்டறிந்திருப்பான் நிச்சயம் அவள் ஏதோ அமாஷ்யமான திரைப்படத்தினைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று! அச்சூழலில் அவளைச் சிறிது வெறுப்பேற்ற எண்ணியவன் மெல்ல மெல்ல அவள் பின்னால் சென்று அப்போர்வையினை சட்டென இழுக்க, '' என்று ஒரே கத்தாய் கத்திவிட்டாள் சிவன்யா. அதனைச் சற்றும் எதிர்நோக்காதவன், தடுமாறிப் பின் சுதாரித்து சட்டென அவள் வாயினைப் பொத்த, எதிரில் இருந்து அனைத்துச் சேட்டைகளையும் புரிந்தது எல்லாம் தன் கணவன் தான் என்ற நிலை உணரவே அவளுக்குச் சிறிது நேரம் பீடித்தது. மெல்ல மெல்ல இருவரும் தன்னிலை உணர்ந்தவர்கள், அவர்கள் இருந்த கோலத்தினையும் உணர நேரம்  பீடிக்கத்தான் செய்தது. சட்டென சுதாரித்தவனாய் அவன் எழ, மனம் முழுதும் வண்ண வண்ண மலர்கள் மலர தானும் தன்னிலைத் துறந்து எழுந்தாள் சிவன்யா. சில நொடிகள் நின்றுப்போன உரையாடல்களை உயிர்பிக்க இருவரும் முயலவில்லை. அவளைத் திரும்பியும் நோக்காமல், அவசரப்பட்ட தன் மடமையினை எண்ணியவனாய், ஏதும் பேச்சின்றி திரும்பி உறங்கத் தொடங்கினான் அசோக்.

உறங்கியதாய் நாடகம் ஆடிய போதும் முழுதும் உறக்கம் வாராமல் தவித்த தவிப்பு எண்ணிலடங்காதது! மனைவியே ஆயினும், அவன் பார்வையில் முதல் சங்கமம் அவள் அனுமதியின்றி தொடங்குவதில் அவன் மனம் விழையவில்லை. நெடுந்நேரமாய் தன்னைப் புரியாமல், நிகழ்ந்த நிகழ்விற்குள் தன்னைத் தொலைத்தவள், மெல்ல மெல்ல மடிக்கணினியின் ஓசைக் கேட்டு சுயநினைவுப் பெற்றவளாய் அதனை மூடி வைத்தாள்.

"தூங்கிட்டீங்களா?" என்று அவள் விடுத்த வினாவினைக் கேள்வியுற்றும் அவன் பதில் நல்கவில்லை சில நொடிகள்! பின் நிதானத்தினை வரவழைத்தவனாய்,

"ஆம்..! தூங்கப் போறேன்!" எனறான் ஒற்றை வரியில்! சிறு புன்னகையோடு இரவு விளக்கினை மட்டும் ஔிர்வித்தவள், அவனருகே மெல்ல தன்னைச் சாய்த்தவளாய், அவனைச் சுற்றி தன் பொற்கரங்களால் சிறைப்பிடிக்க, உறைந்துப் போனான் அசோக்.வினாக்கள் ஆயிரம் இருப்பினும், அனைத்திற்கும் விடைகள் இருவரும் அறிந்த ஒன்றே! அவள் மன எண்ணங்களை ஊகித்தும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.