எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
"என்ன இலக்கியா இங்க இருக்க....நீயும் பரத்தும் காலைல தான வந்திங்க...நான் காபி போட்டு தரேன். நீ ரெஸ்ட் எடு" சமையலறையில் இருந்த இலக்கியாவிடம் சொன்னாள் தமிழ்செல்வி.
அடுப்பின் மேல் இருந்த பார்வையை தமிழ்செல்வியிடம் திருப்பிய இலக்கியா, "எனக்கு காபி போட கூட முடியாதுனு பாட்டி நினைக்கணும்...என் பெரிய பேத்திக்கு தான் எல்லாமே தெரியணும்னு அவங்க சொல்லணும். உன்னை பாக்காம ஒரு வாரம் நிம்மதியா இருந்தேன். இப்போ எதுக்கு காலைல எழுந்ததும் என்கிட்டே வந்து பேசற? எனக்கு தான் உன்கூட பேச பிடிக்கலைனு நல்லாவே தெரியும்ல. அப்போ ஒதுங்கி போக வேண்டியது தான. நீ வந்து வந்து பேசுவ...நான் கோபத்துல கத்துவேன்...அதை பாக்கறவங்க எல்லாம் ஐயோ பாவம் தமிழ், இலக்கியா ரொம்ப மோசம்னு சொல்லணும்...அதான??? காலைலயே என்னை இரிடேட் பண்ணாத...என் புருஷனுக்கு காபி போட எனக்கு தெரியும். நீ கொஞ்சம் தள்ளி நில்லு..." எனவும் அமைதியாக அங்கிருந்த மேடையில் சாய்ந்து நின்றாள் தமிழ்செல்வி.
அவள் குத்தலாக பேசினாலும் அவளின் கணவருக்கு அவள் செய்வதை கண்டு தமிழ்செல்விக்கு சந்தோசமாக தான் இருந்தது.
இரண்டு கோப்பைகளில் காபி ஊற்றி எடுத்தவள் வெளியே செல்ல, மாற்றுள்ளவர்களுக்கு காபி போட்டாள் தமிழ்செல்வி.
இலக்கியா சமயலறையில் இருந்து வெளியே வரவும் அதுவரை இலக்கியாவும் தமிழ்செல்வியும் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நித்யா, இலக்கியாவிடம் சென்றாள்.
"ஹாய் இலக்கியா தான? நான் நித்யா" என்றவளை மேலிருந்து கீழாக பார்த்த இலக்கியா, "நித்யானா??? நீங்க என்ன பெரிய மினிஸ்டரா? பேரு சொன்னதும் தெரிய?" எனவும் நித்யாவின் முகம் சுருங்கி போனது. ஆனாலும் சமாளித்து கொண்டு பேசினாள் நித்யா.
"நான் ராம் அண்ட் பரத்துடைய அத்தை பொண்ணு. ஐரோப்ல படிச்சிட்டு இருந்தேன். இப்போ இங்கயே யூனிவெர்சிட்டில ஜாயின் பண்ணிட்டேன். இனி இங்க தான் இருக்க போறேன்" எனவும் "ஓ...அப்படியா...சந்தோஷம் சந்தோஷம்...இருங்க இருங்க...இவ்ளோ பெரிய வீட்ல யாரு இருந்தா என்ன?" என்றவள் அவளை கடந்து செல்ல முயன்றவளை மீண்டும் தடுத்தாள் நித்யா.
"உங்க அக்காவை விட நீங்க ரொம்ப புத்திசாலியா அழகா இருக்கீங்க...உங்க அளவுக்கு சாமர்த்தியம் இல்லை. இந்த வீட்டுக்கு மருமகளாகர முழு தகுதியும் உங்களுக்கு தான் இருக்கு. ஆனா பாட்டிக்கு அது புரியலைனு நெனைக்கிறேன்" அடுத்த ஆயுதத்தை எடுத்தாள். அவளை நின்று மீண்டும் ஒரு முறை பார்த்தாள் இலக்கியா.
Ila kudutha pulb mithu ku ha ha
Ram serthu kuduthane superuuu
Thank you.