அவளின் அருகே அவன் வந்து நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து அவனை பார்க்க, அவனின் பார்வை அவளை ஊடுருவியது. சிலநொடிகள் அவளையே பார்த்தவன் "என்ன விஷயம் ???" எனவும் அவனின் சட்டென்ற கேள்வியில் தமிழ்செல்விக்கு காற்றை தவிர வாயில் இருந்து ஒன்றும் வரவில்லை.
"ஏதோ சொல்லணும்னு தான என்னையே பார்த்துட்டு இருந்த...அப்போ என்னனு சொல்லு" ராம் மீண்டும் கேட்க,
"ஆ...ஆமாம்" என்றாள் தமிழ்செல்வி. ராம் கைகளை கட்டி கொண்டு அவளையே பார்க்க, அவனின் உயரத்திற்கு அவனை நிமிர்த்து பார்த்து பேச முடியாமல் கழுத்தை வலித்தது தமிழுக்கு. தான் அமர்ந்திருந்த சோபாவில் இருந்து எழுந்து நின்றவள், "அ...அது பாட்டி நம்ம ரெண்டு பேரையும் ஷாப்பிங் போக சொன்னாங்களே..." தமிழ் சொல்லி முடிக்கும் முன் இடையிட்டவன், "நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருக்கேன். பாட்டி உனக்கு வேலை வேணும்னு சொன்னாங்க, அதை செய்தேன். உன்னை ஷாப்பிங் கூட்டிட்டு போக சொல்ராங்க. அதையும் செய்வேன். என் பாட்டி மனசு வருத்தப்படற மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன். கவலை படாதே" என்றவன் அங்கிருந்த நகர முற்பட, "இ...இல்லை அது இல்லை" என்றாள் தமிழ்செல்வி.
அவன் நின்று அவளை திரும்பி பார்க்க, "பாட்டி சொன்னதுக்காக ஷாப்பிங் போகலாம். ஆனா பாட்டி சொன்ன மாதிரி நெறைய எதுவும் வாங்க வேண்டாம். சும்மா ஒண்ணோ ரெண்டோ டிரஸ் வாங்குனா போதும். நான் எனக்கு எதுவும் பிடிக்கலைனு சொல்லி சமாளிச்சுக்கிறேன்" என தமிழ்செல்வி சொல்ல, அவளை சில நொடிகள் புருவம் சுருங்க பார்த்தவன் எதுவும் பேசாமல் மெத்தையில் சென்று அமர்ந்தான்.
அவன் பதில் எதுவும் சொல்லாமல் போகவும் அவனை யோசனையுடன் பார்த்தவள் "சரி எப்படியோ சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்" என்ற நிம்மதியுடன் அங்கிருந்த புத்தகத்தில் ஆழ்ந்து போனாள்.
ஆனால் மொபைலில் விளையாடி கொண்டிருந்த ராமின் மனம் அவள் சொன்னதையே யோசித்து கொண்டிருந்தது. அவனின் அவளை பற்றிய அனுமானங்கள் எல்லாம் தவறோ என்று தோன்றியது அவனுக்கு.
மெல்லிய மஞ்சள் வர்ண சுடிதார் அணிந்து மிதமான ஒப்பனையுடன் கீழே இறங்கி வந்த தமிழ்செல்வியை நெட்டி முறித்தார் விசாலம்.
"அழகா இருக்க செல்வி. ஒரு நிமிஷம் இரு" என்றவர் அவரின் அறைக்கு வேகமாக சென்றார். சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்தவர் கைகளில் ஒரு சிறிய நகை பெட்டி
Ila kudutha pulb mithu ku ha ha
Ram serthu kuduthane superuuu
Thank you.