(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"ராம், அப்போ செல்வியையும் பாரத்தையும் அபிஷியலா எல்லோருக்கும் மண்டே இண்ட்ரோடியஸ் பண்ணிடு" பாட்டி சொல்ல, ராம் சரி என தலை அசைத்தான்.

"சூப்பர் அண்ணி. மண்டேல இருந்து நாம ஒரே பேமிலி மெம்பெர்ஸ் மட்டும் இல்ல. நம்ம கொலீக்ஸ்ஸும் கூட" என்றான் பரத். அதை கேட்ட இலக்கியாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, இதெல்லாம் பார்த்து கொண்டிருந்த நித்யாவின் மனதில் நெருப்பு பற்றி எரிய, அதில் மேலும் எண்ணையை ஊற்றினார் பாட்டி.

"ராம் நீயும் செல்வியும் ஈவினிங் ஷாப்பிங் போயி செல்விக்கு வேணும்ங்கற சாரீஸ், ட்ரெஸ்ஸஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க" என சொல்லவும் அதுவரை அமைதியாக இருந்த தமிழ், அவசரமாக மறுத்தாள்.

"பாட்டி என்கிட்டயே சாரீஸ் ட்ரெஸ்ஸஸ் எல்லாம் இருக்கு" எனவும் "செல்வி, உன்கிட்ட இருக்கற ட்ரெஸ்ஸஸ் எல்லாம் நல்லா இல்லைனு நான் சொல்லல, ஆனா ஆபீஸ்க்கு போற அதுவும் ஒரு டைரக்டரா போற...சோ உனக்கு தெரியாதது இல்லை. ஒரு ஹையர் ஆஃபீசியல் எப்படி இருக்கணும்னு உனக்கு தெரியும். அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ணிக்கோ" எனவும் தமிழ்செல்வி அமைதியாக ராம் மனத்திலும் நித்யாவின் மனத்திலும் மட்டும் ஒரு கேள்வி இருந்தது...இவளுக்கு என்ன தெரியும் ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களின் நடை உடையை பற்றி...என.

நித்யா கோபத்தில் தன்னுடைய அறையிலேயே கால் வலிக்கும் வரை குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். ராம் உடன் தமிழ்செல்வி செல்வது அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எப்படியாவது தானும் அவர்களுடன் செல்ல வேண்டும். அவர்களை மட்டும் தனியாக அனுப்ப கூடாது என எண்ணியவள் அதற்க்கு என்ன செய்யலாம் என முடிவெடுத்ததும் ஒரு நிம்மதியுடன் மதிய உணவை உண்ட மயக்கத்தில் மெத்தையில் விழுந்தாள்.

அறைக்குள் வந்த தமிழுக்கு அவள் சொல்ல வந்ததை ராமிடம் சொல்ல தயக்கமாக இருந்தது. எப்படி ஆரம்பிப்பது என யோசித்தபடி அவள் அவன் முகத்தையே பார்க்க, தன்னுடைய மொபைலில் விளையாடி கொண்டிருந்த ராம் அவள் புறம் திரும்பினான். அவன் பார்வையை உணர்ந்தவள் தன்னுடைய பார்வையை வேறு திசைக்கு திருப்பினாள். மீண்டும் ராம் விளையாட்டில் கவனம் செலுத்த அவளின் பார்வை மீண்டும் அவன் புறம் சென்றது யோசனையுடன். உள்ளுணர்வு உந்த மீண்டும் ராமின் பார்வை தமிழ்செல்வியின் புறம் திரும்ப, இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் சில நிமிடங்கள் நீடித்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ராம் எழுந்து அவன் அருகே வர, தலையை குனிந்து அமர்ந்திருந்த தமிழ்செல்வி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.