(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இருந்தது. அதை திறந்தவர் அதில் இருந்த ஒரு அழகிய ப்ரேஸ்லெட்டை அவளின் கையில் அணிவித்தார்.

"ஐயோ என்ன பாட்டி இதெல்லாம் எதுக்கு???" தமிழ்செல்வி கேட்கவும், "இந்த முறை ஊருக்கு போனப்போ அறுவடை காசு வந்ததும் இதை வாங்கிட்டேன். உனக்கும் இலக்கியாவுக்கும் வாங்குனேன். நான் அவளுக்கு அப்பறம் கொடுக்கறேன்" என்றார் விசாலம்.

"தேங்க்ஸ் பாட்டி. அழகா இருக்கு" கையில் இருந்த அந்த ப்ரேஸ்லெட்டை தடவியபடி சொன்னாள் தமிழ்செல்வி. மேலே இருந்து இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த நித்யாவுக்கு, இதெல்லாம் அவளுக்கானது என்ற எண்ணத்தில் அவளின் மனம் தமிழ்செல்வியின் மேல் கொண்டிருந்த வெறுப்பை இன்னும் இன்னும் வளர்த்தது. ராம் வெளியே வருவதற்காக காத்து கொண்டிருந்தாள் நித்யா.

அவள் எதிர்பார்த்தது போல சில நிமிடங்களில் ராமின் அறை கதவு திறக்க, அப்போது தான் எதேச்சையாக தன்னுடைய அறையில் இருந்து வெளியே வருவது போல வந்தாள் நித்யா.

"ஹலோ ராம்... குட் ஈவினிங்" அவனை பார்த்ததும் அவள் முகம் முழுதும் பரவசத்துடன் புன்னகைத்தாள்.

"குட் ஈவினிங் நித்து... நீயும் எங்கயோ வெளிய கிளம்பிட்ட போல இருக்கு? எப்படி போற??" ராம் கேட்கவும், இந்த கேள்வியை எதிர்பார்த்து தானே அவன் கிளம்பும் நேரத்திலேயே அவளும் வந்தது.

"ஆமாம் ராம். ஷாப்பிங் போறேன். காலேஜ்க்கு கொஞ்சம் ட்ரெஸ்ஸஸ் வாங்கணும். நான் டாக்சி புக் பண்ணி போயிடுவேன் ராம். நீங்களும் தமிழ்செல்வியும் வெளிய போறீங்க...அதான் நான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நெனைக்கிறேன்" என்றாள் நித்யா.

"ஹ்ம்ம் ஆமாம் நித்து... நானும் தமிழும் ஷாப்பிங் போறோம். வேணா நான் பரத் கிட்ட சொல்லி உன்னை டிராப் பண்ண சொல்லவா? " ராம் கேட்கவும், அவனிடம் இருந்து அப்படி ஒரு பதிலை எதிர்பார்த்திருக்கவில்லை நித்யா.

"நானும் அங்கு தான் போகிறேன். உன்னை கூட்டி கொண்டு போகிறேன்" என சொல்லுவான் என எண்ணியவளின் எண்ணத்திற்கு மாறாக அவன் சொல்ல, ஒரு நிமிடம் அப்படியே சிலையாகி போனாள் நித்யா.

"ராம் இன்னும் ரெடி ஆகலையா??" என்ற விசாலத்தின் குரல் கீழிருந்து ஒலிக்க, "சரி நித்து லேட் ஆச்சு பாட்டி திட்டுவாங்க" என அவன் இரண்டிரண்டு படிகளாக தாவி கீழே ஓட, "இந்த கிழவியை..." என பாட்டியை எண்ணி பல்லை கடித்தாள் நித்யா.

இருவரும் காரில் ஒன்றாக செல்வதை பால்கனியில் இருந்து பார்த்த நித்யா கோபத்துடன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.