அங்கிருந்த சுவற்றை கையை மடக்கி குத்தினாள்.
"நான் உங்க கிட்ட ஏற்கனவே சொன்னனே...ஒண்ணோ ரெண்டோ போதும்னு...இப்போ கிட்டத்தட்ட இருபது ட்ரெஸ்ஸஸ் இருக்கு. அது போக சாரீஸ்..." அங்கிருந்த டிராலியை பில் போடும் பகுதிக்கு நகர்த்தியபடி சென்று கொண்டிருந்த ராமின் கையை பிடித்து நிறுத்திய தமிழ்செல்வி கேட்கவும், அவனின் கையின் மேல் பதிந்த அவளின் விரல்களில் அவனின் பார்வை விழுந்தது. அவனின் பார்வையை உணர்ந்தவள் தன்னுடைய கையை விலக்கி கொள்ள, அவன் அங்கிருந்த பில்லிங் செக்ஷனுக்கு நகர்ந்தான்.
கையில் இருந்த பைகளை எல்லாம் பின் சீட்டில் வைத்தவன் ட்ரைவர் சீட்டில் அமர, அவள் கேட்கும் எந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருப்பவனை அவளால் புரிந்து கொள்ள இயலாமல் மனக்குழப்பமே விஞ்சியது.
"இப்போ காருக்குள்ள ஏற போறியா இல்லை நடந்தே வரதா ஐடியாவா?" ராம் கேட்கவும் கார் கதவை திறந்து அவன் அருகே அமர்ந்தாள்.
வண்டியை ஒரு ரெஸ்டாரண்டின் அருகே நிறுத்தவும் அவள் கேள்வியாக அவனை பார்க்க, "மணி இப்போவே பத்துக்கு மேல ஆச்சு. இப்போ போயி பாக்கியம் ஆன்டியை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நான் ஏற்கனவே அவங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்" என்றவன் வண்டியை விட்டு கீழே இறங்க அவளும் இறங்கி அவன் பின்னே சென்றாள்.
இருவருக்குமான அவன் ஆர்டர் செய்தான். கைவிரல்களை பின்னியபடி அமைதியாக தனக்கு எதிரே அமர்ந்திருப்பவளை கண்டான். அந்த மஞ்சம் விளக்கு வெளிச்சத்தில் அவள் ஒரு அழகிய சூரிய காந்தி பூவை போல தெரிந்தாள். அவளின் சுருங்கிய புருவங்களை கண்டவனுக்கு அவள் அவனை மனதிற்குள் திட்டி கொண்டு இருப்பாளாயிருக்கும் என தோன்றவும் அவனுடைய இதழில் சிறு புன்னகை எட்டி பார்த்தது. அவளின் அகன்ற விழிகள் அவனை பார்க்காமல் வெளியே தெரிந்த செடிகளை பார்த்து கொண்டிருந்தது.
என்னை பார்க்க பிடிக்கவில்லையோ??? ராமின் மனம் வாட, "சே...என்ன இது மடத்தனமாக யோசிக்கிறேன்" என தன்னுடைய பின்னந்தலையில் மெல்ல தட்டியவன் "உன்னோட பிளான் சொதப்பிடுச்சுனு கோவமா இருக்கியா??" என்றவனை திரும்பி பார்த்தவள் "என்ன பிளான்??" என்றாள் புரியாமல்.
"நீ சொன்ன மாதிரி ஒண்ணோ ரெண்டோ ட்ரெஸ் வாங்கிட்டு போனா நிச்சயம் பாட்டி உன்னை திட்ட மாட்டாங்க. என் பேத்தி பாரு கொஞ்சம் கூட பொருள் மேல ஆசைப்படலன்னு உன்னை பத்தி பெருமையா பேசி, அவ வேண்டாம்னு சொன்னா நீ அப்படியே விட்டுடுவியான்னு என்னை திட்டுவாங்க. நீ பாட்டிகிட்ட நல்ல பேரு வாங்கிட்டே இருக்கணும் நான் கெட்ட பேரு