(Reading time: 15 - 30 minutes)
Priyamaanavale
Priyamaanavale

வாங்கணும்.. லாங் டெர்ம் பிளான் இல்லையா உன்னுடையது" என்றான் ராம்.

அவளின் சுழிந்த புருவங்கள் மேலும் சுழிய, "யு ஆர் அன்பிலிவபிள். எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறிங்க? என்னால எல்லாம் எவ்ளோ ட்ரை பண்ணுனாலும் இப்படி எல்லாம் யோசிக்க முடியாது.. யு ஆர் வெரி நேரோ மைண்டெட். நான் ஏதோ பணம் பறிக்க வந்த மாதிரியே பேசிட்டு இருக்கீங்க... நான் பணத்தாசை பிடிச்சவன்னு எதை வெச்சு சொல்றிங்க???" தமிழ்செல்வி அவனின் அவளின் மேலான இப்படி பட்ட எண்ணம் எதனால் வந்தது என தெரியாமல் கேட்டாள்.

"சார் உங்க புட்" என சர்வர் கொண்டு வரவும் இருவரும் அமைதியாகினர்.

அதற்க்கு பிறகு இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு விட்டு கிளம்ப, காரை ஓட்டி கொண்டிருந்த ராமின் காதுகளில் அந்த உரையாடல் திரும்ப திரும்ப கேட்டது.

"நிச்சயமா பணம் ரொம்ப முக்கியம். எனக்கு அடிக்கடி ஷாப்பிங் போகணும். டிரஸ், ஜெவெல்ஸ், பியூட்டி ப்ராடக்ட்ஸ் வாங்கணும். அடிக்கடி வெளிய சாப்பிட கூட்டிட்டு போகணும், ட்ரிப் கூட்டிட்டு போகணும். இதெல்லாம் உங்களால முடியுமா? இன்னும் காலேஜ் முடிக்கல. ஒரு ஜாப் இல்லை. அப்பறம் எப்படி நான் உங்க லவ்க்கு ஓகே சொல்ல முடியும்????" அவன் மறக்க முயலும் போதெல்லாம் மேலும் மேலும் நினைவில் தோன்றும் இந்த உரையாடல் அவனை விடாமல் துரத்தி கொண்டு இருந்தது...அதை சொன்னது யாரோ ஒருத்தி இல்லையே...அவன் மனதை ஒற்றை பார்வையில் கொள்ளை கொண்ட அவனின் முதல் காதல் அல்லவா....   

தொடரும்

Next episode will be published on 15th Aug. This series is updated weekly on Saturday mornings.

Go to Priyamaanavale story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.