(Reading time: 11 - 21 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

"உங்கப் பொண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியாது! என் கையில் கிடைத்த வைரத்தை நானே பைத்தியங்காரன் மாதிரி தூக்கிப் போட்டுட்டேன். அவ என்ன களங்கமாகிட்டா? அவ இல்லாத இத்தனை வருடத்துல, நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, அவ கடைசி வரைக்கும் என் ஒருத்தனுக்காக மட்டும் வாழ்ந்து, இன்னிக்கு இல்லாமலே போயிட்டா!" என்றவரின் குரல் அடைத்தது.

"பெத்தவங்க சாபத்தை வாங்கினா அப்படித்தான்!" என்ற கர்வக்குரல் ஒலித்தது பார்வதியிடமிருந்து!

"நீங்க உயிரோட இருக்கீங்க..இது என்ன வரமா? அப்படியிருந்தா சந்தோஷம்! தர்மாவைப் பற்றி ஒரு வார்த்தை பேசாதீங்க, உங்களுக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னுத் தானே, கர்ப்பமாக இருக்கான்னுக் கூட பார்க்காம அவளைக் கொல்ல பார்த்தீங்க? அவ என்னுடைய மனைவி! எனக்கு மட்டுந்தான் அவ மேலே உரிமை இருக்கு! அசோக்கிற்கு உங்களால எதாவது ஆபத்து வரும்னா, பழைய சூர்ய நாராயணனை எல்லாரும் பார்க்க வேண்டி இருக்கும், ஜாக்கிரதை!" எச்சரிக்கை மொழிகளை விடுத்தவராய் அம்மூதாட்டியினைக் கடந்துச் சென்றார் சூர்ய நாராயணன்.

ஒவ்வொரு இடமாக அவ்வில்லம் முழுதினையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் அசோக். இங்கு வாழ வேண்டிய மகாராணித் தான், சிறே குடிலில் எல்லாம் தன் காலத்தினைக் கழித்தார் என்ற வினா அவனுடையது! சிறுக்காலம் உயிரோடு இருந்திருக்கலாம், தந்தையின் முகத்தினை அவர் மீண்டும் ஒருமுறையேனும் கண்டிருக்கலாம்! மன்னிப்பை நல்கி சென்றிருக்கலாம்! எனக்கும் அவர் வாய்ப்பளிக்கவில்லை, தந்தைக்கும் அவர் வாய்ப்பளிக்கவில்லை. பலவேறு சிந்தனைகளோடு தன் தந்தையின் அறையினைக் கடக்க முயன்றவன், அது முழுதுமாக அடைக்கப்படாததை கண்டு கதவினைத் திறந்தான். திறந்த மாத்திரமே அவனை வரவேற்றது எல்லாம் தாயின் புகைப்படமே, இருளிலும்,அவர் புகைப்படத்திற்கு மட்டும் ஔியினை வழங்க ஆணைப்பிறப்பித்து இருந்தார் சூர்ய நாராயணன் மின்விளக்குகளுக்கு! ஆம்..தாயாருக்கு இருள் என்றால் அச்சம்! தந்தையாருக்கோ இருள் தான் பிரியம்! இருவேறு துருவங்கள் எவ்வாறு வாழ்க்கைப் பயணத்தில் இணைந்தன என்பதே அவனுக்குப் புதிராய் இருந்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரின் அறைக்குள் மெல்ல நுழைந்தவனாய், ஓசையின்றி தனது காலணி பாக்கெட்டில் இருந்து சிறு பெட்டகத்தினை எடுத்தான் அசோக். மனம் இலகுவாக, சிறுப் புன்னகையினை விடுத்தவன் அதனைத் திறவினான், அதே இல்லத்தில், சூர்ய நாராயணன் தன் கரங்கொண்டு தர்மாவின் கழுத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.