(Reading time: 13 - 25 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 13 - ஆர்த்தி N

maraveno ninnai

வீட்டினுள் நுழையும் போதே “அம்மா.. எங்க ம்மா இருக்கே..” என கத்திக் கொண்டே வந்தாள் ஷைலு.. “ஏண்டி எப்போ பாரு கத்திட்டே இருக்கே.. இரு வரேன்..” என உள்ளறையில் இருந்து வந்தார் விஜி. “ம்மா இங்கப் பாரு ம்மா அப்பா இவ்ளோ சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்டார்.. அதுவுமில்லாம பிரம்ம பிடிச்ச மாதிரி உட்கார்ந்திட்டு இருக்காரு.. நான் வந்ததுக் கூட கவனிக்காம அப்படி என்ன யோசிச்சிட்டு இருக்காரு” என தன் தாயின் காதைக் கடிக்க..

அவளின் அன்னையோ அட லூசே என்பதுப் போல அவளைப் பார்த்து.. “அவர் இன்னைக்கு லீவ் போட்டுடார் டா.. சேகர் அண்ணாக் கூட ஏதோ வேலையா வெளியப் போனார், வந்தது’ல இருந்து இப்படி தான் இருக்கார்.. கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டிறார்.. கொஞ்சம் நேரம் களிச்சு அவரே ஒலறிருவாரு சோ கண்டுக்காத..”

என அம்மாவும் மகளும் சரவணனின் தலையை உருட்ட.. விஜி கடைசியாக சொன்னதை மட்டும் சரியாக அவர் காதில் விழ, “ஒரு மனுஷன் கொஞ்சம் நேரம் அமைதியா இருந்தாப் போதுமே உடனே ரெண்டுப் பேரும் கூட்டுச் சேர்ந்து என் தலையை ஃபுட்பால் ஆடிருவீங்க..” என முறைக்க

அவரின் இருப்பக்கமும் அமர்ந்து இருவரும் அவரை தொனப்பி எடுக்க ஆரம்பித்தனர், என்ன ஆயிற்று என.. “ஹஷோ ஒன்னும் ஆகலை.. ஷைலு வீட்டுக்கு வந்த உடனே இந்த கை கால் கழுவுர பழக்கம் எல்லாம் உங்க அம்மா சொல்லித் தரலையா உனக்கு.. முதல போ போய் ஃப்ரெஷ் ஆகு”

“போறேன் போறேன்.. நான் போனதுக்கு அப்புறம் அம்மா கிட்டையும் நீங்க சொல்லக் கூடாது..” என வில்லத்தனமாக சொல்லிட்டுப் போக..

“இவ எனக்கு பொண்ணு இல்லை என் மாமியார்..” என செல்லமாக தன் மகளை வைதுக்கொண்டே தன் கணவனிடம் திரும்பினார் கேள்வியாக.

சரவணன் சேகரைப் பார்க்க என்று அவரது அலுவலகம் சென்று இருந்தார் முந்தைய தினம். கவலைத் தோய்ந்த முகத்துடன் இருந்த சேகரைப் பார்த்தவர் என்ன ஏது என்று இவர் விசாரிக்க. சேகருடன் பணிப் புரியும் நபர் ஒருவர் கொஞ்சம் மிகவும் தெரிந்தவர், தொழில் தொடங்கவேண்டும் என வங்கியில் லோன் எடுக்க சேகரை செக்யூரிட்டி சைன் போட கேட்டு இருக்கிறார். இவரும் தெரிந்த நபர் ஒரு உதவி தானே என்று கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால் அந்நபர் தொழிலில் ஏற்பட்ட சிக்கலில் அதை இழுத்துமூடும் நிலைக்கு வந்து தவனையும் கட்ட முடியவில்லைப் போல. இரண்டு மாதங்களாக ஆளையும் காணோம்.

ஆதலால் வங்கி மேலாளர் சேகரைப் பிடித்துக் கொண்டார்.. சுமார் முப்பது லட்ச்சம் கட்ட வேண்டும். வீட்டில் சொல்லவும் முடியவில்லை, கையில் இருந்த சேமிப்பை வைத்து சில வருடங்கள் முன் தான் அவர்கள் இருக்கும் வீட்டை வாங்கியிருந்தார். இப்போது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.