கையிலிருக்கும் சேமிப்பை வைத்து கால் வாசி மட்டுமே அடைக்க முடியும். சந்தோஷிடம் சொன்னால் அவன் கண்டிப்பாக புரட்டி விடுவான். ஆனால் தனது முட்டாள் தனத்தால் மகனை நோகடிக்க விரும்பவில்லை. என்ன பண்ணுவது என்று தெரியாமல் சரவணனை அனுகியிருந்தார்.
“உதவற குணம் இருக்கலாம் அதுக்குனு இப்படியாடா கண்மூடித்தனமா ஒருத்தன நம்புவ..” என கடிந்துக் கொள்ள சேகர் தலைக் குனிந்தார்.
“எதுக்கு இப்போ நீ தலை குனியற.. சரி என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..”
“வீட்ட அடமானம் வெச்சிறலாமானு இருக்கேன் டா.. வேற வழி தெரியலை.. சந்தோஷ் இப்போ தான் வந்திருக்கான். அவன கஷ்ட்டப் படுத்த விரும்பலை”
“அறஞ்சேன்னா தெரியும் உனக்கு.. வீட்ட அடமானம் வெக்கறானாமா.. ஏன் நான் உன் கண்ணுக்கு தெரியல? முதல்ல லீகல்’லா அவன் மேல ஒரு போலிஸ் கம்ப்லைன்ட் ஃபைல் பண்ணனும்.. இப்போதைக்கு பணத்தைப் பத்தி யோசிக்காத நான் பார்த்துக்கிறேன். இன்னைக்கு லேட் ஆயிருச்சு நாளைக்கு காலை’ல முதல் வேலையா ஐஜி ஆஃபிஸ் போறோம். என் ஸ்கூல் ஃப்ரென்ட் ஏஎஸ்பி ஆ இருக்கான். அவன் கிட்ட பேசுவோம். நீ அந்த ஆளோட டீடெயில்ஸ் எடுத்துக்கோ. இப்போ வா வீட்டுக்கு கிளம்பலாம்”
“சரி டா. நாளைக்கு போலாம் “ என சேகர் கணத்த மனதுடன் அவருடன் கிளம்பினார்.
இன்று காலையில் அதன் விஷயமாக தான் இருவரும் ஐஜி ஆஃபிஸ் சென்று லீகலி ஒரு கம்ப்லைன்ட் ரெஜிஸ்டெர் செய்தனர். ஆனால் அந்த வங்கியில் பணத்தை இப்பொழுதே செட்டில் செய்ய வேண்டும் என்று ஒரேடியாக நின்றனர்.
“இப்போ என்ன டா சரவணா பண்ணறது.. பேசாம சங்கீ கிட்ட பேசிட்டு வீட்ட வெக்கறேன் வேற வழி இல்லை” என அவர் பாட்டுக்கு புலம்ப
“உன்னை நான் நேத்தே காசுப் பத்தி யோசிக்காதனு சொல்லிட்டேன். மறுபடியும் வீட்டை விக்கறேன் அது இது ஒலறிட்டு இருக்கே” என்று சரவணன் முறைக்க. “எனக்கு சொந்தமா நிலம் இருக்குல சிட்டி ஔட்டர் ல.. அத விலைப் பேசறேன் எப்படியும் முப்பது லட்ச்சம் மேலையேப் போகும்.. மொத்தமா அடைச்சிரலாம்” என முடிக்க..
சேகரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.” டேய் அது ஷைலு கல்யாணத்துக்காக வெச்சிருக்க.. அதப் போய்.. பேசாம இருடா.. நான் பார்த்துக்கிறேன்..” என மறுக்க
“ஷைலுக்கு என்ன நாளைக்கேவா நம்மப் பண்ணப்போறோம்.. அது அப்போப் பார்த்துக்கலாம்.. நான் சொன்னது தான் முடிவு” என சேகரை அடக்கிவிட்டார்..
சேகருக்கு குற்ற உணர்வாக இருந்தது தனது முட்டாள் தனத்தால் இப்போது சரவணனை இதில் இழுத்துவிட்டது. சேகரின் குழப்பமான் முகத்தைக் கண்டு அவரை தோழோட அணைத்த