(Reading time: 13 - 25 minutes)

தான் தள்ளி நிப்பிங்களா நீங்க ரெண்டுப் பேரும்..” என சரவணனன் வருத்தப்பட ஆரம்பிக்க..

“சேகர் அண்ணா நான் சும்மா உங்கள அண்ணானு கூப்பிடிட்டு இருக்கல.. நிஜமா நீங்க எனக்கு ஒரு சகோதரர் போல தான்.. நாங்க காதல் திருமணம் பண்ணிகிட்டதால எங்களுக்கு ரெண்டு பக்க சொந்தமும் இல்லை.. உங்கள தான் நாங்க இவ்ளோ வருஷமா சொந்தமா நினைச்சிட்டு இருக்கோம்.. உங்களுக்கு பண்ணாம யாருக்கு பண்ணப்போறோம். அதுனால இத இதோட விடுங்க” என விஜியே சொல்லிவிட அதற்கு மேல அவர்கள் இருவரினால் வாதாட முடியாமல் போனது. சங்கீ விஜியை பாசத்துடன் அணைத்துக் கொள்ள. சேகரும் விஜியின் தலையை பாசத்துடன் வருடி கொண்டிருந்தார்.

அதுவரை மாடிப் படி அருகினில் நின்றுக் கொண்டு அங்கு நடப்பதை புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஷைலு “அட அட என்ன ஒரு கண் கொள்ளா காட்சியா இருக்கு.. என்ன மம்மி அண்ணன் செண்டிமென்ட் ஓவரா இருக்கு” என்றபடியே தன் தந்தையின் அருகே வர.. “என்ன எல்லாரும் பாச மழையில நனைஞ்சாச்சா.. மம்மி இப்போ ஆச்சு என்ன கொஞ்சம் கவனிக்கறேளா..ஸ்கூல்ல இருந்த வந்த பிள்ளைக்கு வயித்துக்கு ஏதாச்சு தர ஐடியா இருக்கா..” அதன் பின்னே எல்லோரும் கொஞ்சம் சகஜ நிலைக்கு திரும்பினர்.

“வாய் வாய்.. வா எல்லாரும் மதியம் சாப்பிடற நேரம் தான், சங்கீ அண்ணா நீங்க ரெண்டுப் பேரும் வாங்க..” என உணவு மேஜைக்கு சென்றனர். பின்னர் பொதுவாக பேசிக் கொண்டு மதிய உணவை முடித்தக் கையோடு ஹாலில் அமர்ந்து சேகர் மற்றும் சரவணனன் பேசிக் கொண்டிருக்க, விஜி சங்கீ சமையலறையில் ஐக்கியமாயினர்.

மணி அப்பொழுது தான் மாலை மூன்றை தொட்டிருக்க என்ன செய்வது என்று தெரியாமல் அவளது நண்பன் ஹர்ஷாவிற்கு மெசேஜ் அனுப்பினாள் எங்கு இருக்கான் என கேட்டு.. அப்பொழுது தான் வீட்டிற்கு வந்திருப்பதாக பதிலனுப்ப உடனே விஜியிடம் சொல்லிவிட்டு அங்கு சென்று விட்டாள் ஷைலு. ரித்து மற்றும் ஹர்ஷாவின் இல்லம் அருகருகேயே உள்ளது அதே தெருவில் நான்கு வீடுகள் தள்ளி. வேகமாக ஹர்ஷாவின் வீட்டு முன்னே மூச்சு வாங்க நின்றவள் அப்பொழுது தான் வெளியே வந்த ரித்து ஷைலுவைப் பார்த்து.. “என்னடி ஹர்ஷுவைப் பார்க்க வந்தியா.. வா நானும் வரேன்.. வீட்ல செம்ம போர்..”

“நீ இன்னைக்கு காலேஜ் போகலையா?” ரித்து எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தாள்

“இல்லைடி இன்னிக்கி லீவ் போட்டுடேன்.. சரி வா” என அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.

ஹர்ஷாவின் இல்லம் அந்த தெருவிலையே மிக பெரிதாக இருந்தது. ஒரு சிறிய வில்லா போன்ற அமைப்பைக் கொண்டிருந்தது. அவனது பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். கேட்டிலிருந்த செக்யூரிட்டி இருவரையும் அடையாளம் கண்டுக் கொண்டு உள் அனுப்பினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.