(Reading time: 15 - 30 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

"ஈஸி… சீக்கிரமாக கண்டுபிடிச்சிடலாம்…"

"எல்லாம் என் முட்டாள்தனத்தில் ஆரம்பித்தது. அன்னிக்கு மட்டும் நான் விபத்தில் சிக்காமல் இருந்தால்…"

"கடந்து போன சம்பவங்களை நினைத்து பார்ப்பதும்… கவலைபடுவதும்… ஒரு பயனையும் தராது. இவ்வளவு நாட்கள் விட்டதே தவறு… அடுத்து செய்ய வேண்டியதை கவனமாக செய்வோம்" பேசிக் கொண்டே வீட்டு வாசலில் காரை நிறுத்தினான்.

வீட்டிற்குள் சென்றால்... கலவரமாக நந்தினி நின்று கொண்டிருந்தாள். அவள் பக்கத்து வீட்டை பார்ப்பதும் இவர்களை பார்ப்பதுமாக நின்றாள். ரஞ்சனுக்கு ஏதோ பிடிபட,

" என்ன விஷயம்... ஏன் ரேச்சலுக்கு எதுவும் பிரச்சனையா?" என்று கேட்டான்.

ரேச்சல் என்ற பெயரைக் கேட்கவுமே தன்னுடைய நினைவுகளிலிருந்து மீண்ட சத்யன் நந்தினியை பார்த்தான்.

"ரேச்சலுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் அவளுடைய ஃபிரெண்டுனு சொல்வாளே.. அந்த எடிக்கு ஏதோ உடல்நிலை சரியில்லை. இவங்கதான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் இருக்காங்க. கொஞ்சம் பதட்டத்தோடு ஆஸ்பத்திரிக்கு போய் இருக்காள். அதான் அவள் வந்துட்டாளான்னு பார்த்துகிட்டு இருக்கேன்" என்று சொன்னாள்.

'ஏன் எடிக்கு என்ன ஆச்சு?" என்று சத்யன் பதறினான்.

" அந்தப் பையன் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான். தலையில் அடிபட்டு ரொம்ப ரத்தம் வெளியேறிடுச்சு. அவங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. அநேகமா ஜிஹெச்தான் போயிருப்பாங்க"

"மை காட்... எடிக்கு உடம்பு சரியில்லையா?. நான் அவனை போய் பார்த்தே ஆகணும். எனக்கு அந்த பையனை ரொம்ப பிடிக்கும். ரஞ்சன் யூ கேரி ஆன். நான் போய் பாத்துட்டு வரேன்" என்று சொல்லி வாசல் பக்கம் திரும்பினான்.

" இரு... இரு… நீ மட்டும் தனியாக போகாதே. நான் உன்னுடனே வருகின்றேன்" என்று ரஞ்சனும் பின்னே ஓடினான்.

அவனுக்கு ஏற்கனவே சத்யன் குழப்பத்தில் இருப்பதால் அவனைத் தனியே விட பயம். அதனால் கூடவே ஓடினான். இருவரும் காரில் ஏறி நகரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே எமர்ஜன்ஸி வார்டை தேடிப்பிடித்து சென்றால், ஜெமிதான் முதலில் கண்ணில் பட்டான்.

"ஜெமி நீங்களும் இங்கதான் இருக்கீங்களா?" என்று ரஞ்சன் ஆச்சரியமா கேட்டான்.

" வேற வழி..? பஸ்ஸில் ஏறப் போனவனை அத்தை கூப்பிட்டு விட்டாங்க. எடிக்கு ஏ பாஸிட்டிவ் இரத்த வகை. ப்ளட் தரணும்னு வந்திட்டேன். அத்தை உள்ளேதான் இருக்காங்க. தலைல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.