(Reading time: 13 - 26 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

இழுக்கிறார்களே… இன்னும் என்னவாக இருக்கும்?. என்று யோசித்தனர்.

ஒருவேளை ரேச்சலுக்கும் ஜெமிக்கும் நடக்கவிருக்கும் திருமணம் பற்றி பேசுவாரோ என்று யோசித்தனர். ஆனால் ஷீலா முற்றிலும் புதிய ஒரு விஷயத்தை சொன்னார். அது அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத விஷயமாக இருந்தது.அவர் சொன்னது என்னவெனில்...

"நீங்கள் நினைப்பதுபோல ரேச்சல் சாதாரணமான நிலையில் இல்லை. அவள் அம்னீசியா எனப்படும் வியாதியினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். மேத்யூஸ் இறந்துபோன விபத்தின்பின் அவளுக்குப் பழைய நினைவுகள் எதுவும் இல்லை. இப்போது நடப்பவை மட்டுமே அவளுக்கு தெரிகிறது. நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இப்பொழுது அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் புதியவர்களை பற்றிய நினைவு தற்காலிகமானதுதான். அதாவது அவளுக்கு பழைய நினைவுகள் திரும்பி வரும் பொழுது… இப்பொழுதைய கால கட்டத்தில் நடந்த எதுவுமே அவளுக்கு நினைவு இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர் சொல்லி இருக்கிறார். அதனால்தான் நான் அவளுடைய திருமணத்தை பற்றிகூட யோசிக்கவில்லை. அவள் மேற்படிப்பு படிக்கவும் அவளை நான் அனுப்பவில்லை. எங்கள் சொந்த ஊரை விட்டு விலகி இங்கு வந்து அமைதியாக கிட்டதட்ட ஒளிந்து கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்" என்று சொன்னார்.

"ஏன் டாக்டர்?"

"அங்கு அனைவரும் அவளை கேள்வியாக கேட்டு பழைய விஷயங்களை பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் அவளுக்கு தலைவலியும் மயக்கமும் வந்துவிடுகிறது. அவளால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. எனவேதான் முற்றிலும் புதிய சூழல் அவளுக்கு ஒத்துவரும் என்று இங்கு வந்து தங்கி இருக்கிறேன்."

"நீங்கள் சொல்வது உண்மையா?. ஆனால் அவளை பார்த்தால் அப்படி மனநிலை பாதிக்கப்பட்ட பெண் போல இல்லையே." என்றான் ரஞ்சன்.

"அவள் மனநிலை பாதிக்கப் படவில்லை. அவளுக்கு பழைய நினைவுகள் இல்லை அவ்வளவுதான். மற்றபடி அவள் நார்மல்தான் சாதாரண பெண் போலதான் இருக்கிறாள். எனக்கு இருக்கிற பிரச்சினை அவளுடைய மறதி மட்டுமே"

"கேட்கவே சங்கடமாக இருக்கிறது டாக்டர்" என்று சத்யனும் வருத்தப்பட்டான்.

" பரவாயில்லை இது நான் ஏற்றுக் கொண்ட விஷயம்தான். நான் ரேச்சலுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். காலம் மிக விரைவில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என்று நம்புகிறேன். அவளுடைய எதிர்காலத்தை நல்லபடியாக அமைக்க வேண்டும். நீங்கள் இந்த விஷயத்தை புரிந்து கொண்டு அவளிடம் பழகினால் நல்லது என்று நினைக்கிறேன். இதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.