நகைச்சுவையாக பேசுவாள். அவளுக்கு பள்ளியில் தோழிகள் அதிகமாக இருந்தோம்.. நாங்கள் அனைவருமே அவள் பேசுவதையும் அவள் செய்யும் ரகளையையும் மிகவும் ரசிப்போம்..படிப்பிலும் திறமையிலும் சுட்டி என்பதால் ஆசிரியர்களுக்கும் அவள் செல்லமாக இருந்தாள்"
"என்ன செல்கிறீர்கள்?. மீரா மிகவும் அமைதியானவள். எங்கள் வீட்டில் அவ்வளவு அடக்கமாக இருப்பாள்." சத்யன் சொன்னான்.
"உங்கள் வீட்டில் மட்டுமல்ல... அவள் அவளுடைய வீட்டிலும் இருக்குமிடம் தெரியாது ரொம்பவும் அமைதியாக இருப்பாள். அவளுடைய அத்தனை ஒரிஜினல் குணாதிசயங்களும் பள்ளியில் மட்டும்தான் வெளிவரும். அவளுடைய குறும்புத்தனம் எல்லை மீறிப் போகும்போது சில சமயம் சிக்கலில் மாட்டிக் கொள்வாள். அவளைப்பற்றிய கம்ப்ளைன்ட் வீட்டிற்கு வரும்பொழுது பரத்துதான் அவளை கண்டிப்பான். அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் அவன் இருந்ததால் அவனுக்கு அந்த சுதந்திரமும் உரிமையும் வழங்கப்பட்டு இருந்தது. எனவேதான் பரத் அவளை எல்லை மீறி துன்புறுத்த ஆரம்பித்தான். அவள் கல்லூரி படிப்பில் இருந்து நிறுத்தியது அவன்தான். அந்த சமயத்தில்தான் நீங்கள் வந்தீர்கள் மீராவிற்கு ஒரு விமோசனம் கிடைத்தது" என்றாள்.
சத்யனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனிடம் எப்படி அவ்வளவு அமைதியாக நடந்து கொண்டாள்?.
"மீராவின் சுட்டித்தனமும் குறும்புத்தனமும் குழந்தைத்தனமும் அவளுடைய பள்ளிப் படிப்போடு நின்று விட்டன. அதன் பிறகு அவள் வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகரித்துவிட்டன. ஏனெனில் எப்பொழுது வேண்டுமானாலும் பரத்திற்கு அவளை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் அவள் பயத்துடன் இருந்தாள். அதனால் அவள் தன்னை மாற்றிக்கொண்டாள்."
ரஞ்சனுக்கு மீராவை பற்றிய முழு விவரங்களும் இப்பொழுது புரிந்துவிட்டது. மீரா பெற்றோரை இழந்தவள். அவளுடைய சொத்துக்காக இவர்கள் அம்மாவா அப்பாவா இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவளுடைய குழந்தைதனத்தை சுட்டித்தனத்தை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவளுடைய முழு கட்டுப்பாட்டையும் பரத்திடம் தந்துவிட்டார்கள். பரத் அவளை கொடுமைப்படுத்த ஆரம்பிக்கவும் அவள் தன்னுடைய இயல்பான குணங்களை மறைத்து ஒரு எந்திரம் போல மாறி இருக்கிறாள். ஒருவேளை அதே பயத்துடன் சத்யன் வீட்டிலும் அவள் பழகி இருக்கலாம் என்று நினைத்தான்.
"மிக்க நன்றி சிஸ்டர். பரத்தை விசாரித்தால் உண்மை தெரியும். நீங்கள் ஏன் பதறினீர்கள் என்று இப்போது புரிகிறது நாங்கள் மீராவை தேடி கண்டுபிடித்ததும் என்ன விவரம் என்று உங்களிடம் சொல்கிறோம்" என்று சத்யனை அழைந்துக் கொண்டு கிளம்பினான்.
தொடரும்
Next episode will be published on 8th Sep. This series is updated weekly on Tuesday evenings.
Go to Marappin Maraven Ninnai Maranthariyen story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.