(Reading time: 11 - 22 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

அவன் முகத்தினையே சலனமின்றி நோக்கிக் கொண்டிருந்தார் பார்வதி.

"போய் பால் கறங்க..." சர்வ சாதாரணமாய் கூறிவிட்டு மீண்டும் செய்தித்தாளில் அவர் கவனம் பதிக்க பெருத்த ஏமாற்றமாய் போனது அவனுக்கு! தப்பித்தால் போதும் என்பதாய் அவனை இழுத்துக் கொண்டு மாட்டுக் கொட்டகைக்கு சென்றார் மாணிக்கம்.

பாட்டியை கண்டுவிட்ட திருப்தி, அவரோடு உரையாடிய ஆனந்தம் மனதில் இன்ப ஊற்றினை சுரக்கத்தான் வைத்தது அவனுக்கு!

"தப்பித்தோம்! தம்பி...நீ இப்படி உட்காரு ராசா..! நான் பால் கறந்துட்டு வாரேன்! ராசா மாதிரி கால் மேலே கால் போட்டு உள்ளே உக்கார வேண்டியவன் உன் தலையெழுத்தா இதெல்லாம்..." என்றுப் புலம்பிக் கொண்டே அவனை அமர பணிக்க,

"யாரு ராஜா மாதிரி உட்காரணும் மாணிக்கம்?" என்ற பார்வதியின் குரல் மீண்டும் கேட்க திடுக்கிட்டுத் திரும்பினர் இருவரும்!

"அம்மா...அது...ஆ...ஒழுங்கா படித்திருந்தால்..கால் மேலே கால் போட்டு பெரிய இடத்துல உட்கார்ந்திருந்திருப்பான்ல அதை சொன்னேன்மா!"நிலையை சீராக்கினார் அவர். அவனாகவே வாயைத் திறப்பான் என்று அவரும்,எச்சூழலிலும் வாயே திறவ கூடாது என்று அவனுமே நின்றிருந்தனர்.

"வேலை கற்றுக்க தானே அவன் வந்திருக்கான். இறங்கி வேலை செய்யட்டும்!" அவர் உத்தரவு பிறப்பிக்க தூக்கிவாரி போட்டது இருவருக்கும்! இது என்னப் புது விளையாட்டாகிப் போனது, வசமாய் சிக்கிக் கொண்டோம் என்றுத் திருதிருவென விழித்தான் அசோக்.

"உன் பெயர் என்ன?"திடீரென விளக்க இயலாத மென்மை அவரது குரலில் குடிக்கொண்டது.

"அ....குமார்!" என்று முடித்தான் அசோக்.

"சரி...போய் பால் கற!" என்றார் எழுந்த சிரிப்பினை அடக்கியவராய்,

"ஐயயோ..!இவன் அந்த அளவெல்லாம் திறமைச்சாலி இல்லீங்க...போக போக பழகிப்பான்!" வழக்காடினார் மாணிக்கம்.

"நான் சொல்றதை செய்!" என்று உரத்த குரலில் அவர் கூற, அடங்கிப் போனது அனைவரது குரலும்! பாத்திரத்தை எடுத்துக் கொண்டு விதியே என்று பசுவின் அருகே அச்சத்துடன் சென்றான் அசோக். அவனை பரிதாபமாய் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை செய்கையாலே அங்கிருந்த செல்ல கூறினார் பார்வதி. பாத்திரத்தினை வைத்துக் கொண்டு அதன் மடியினை நடுங்கிய கரத்துடன் அவன் பிடிக்க முயல அதுவோ தனது பின்னங்காலால் அவனைத் தடுத்துக் கொண்டிருந்தது. அக்காட்சியை எல்லாம் கண்டவருக்கோ எழுந்த சிரிப்பினைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.ஏறத்தாழ பத்து நிமிடமாய் இந்த விளையாட்டு தொடர, விளையாடியது போதும் என்று அமைதியானார் பார்வதி. தனது பெயரனிடத்தில் வந்தவர் சில நொடிகள் அன்போடு அவனை உற்று நோக்கினார். காரணமே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.