(Reading time: 13 - 26 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 05 - ஜெபமலர்

பூங்குழலிக்கும் ராகவ்விற்கும் இடையே நல்ல ஒரு நட்பு உருவாகி இருந்தது. இதற்கு இடையில் குழலி தொடர்ந்து 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. அதை அறிந்ததும் ராகவ்விற்கு சற்று கஷ்டமாக இருந்தது.

காரணம் எதுவும் தெரியவில்லையே என்று யோசித்தவன் அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும் அந்த இல்லத்தின் முன்பாக வண்டியை நிறுத்தினான். உள்ளே செல்லவா வேண்டாமா என்று யோசித்தவன் உள்ளே சென்றாலும் என்ன சொல்லி அவளைத் தேடுவது என்று யோசித்தவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

ஆசிரமத்தில் குழலி பெரிய பெண் ஆகிவிட்டால் என்பதற்காக சில சடங்குகளை எளிய முறையில் செய்தனர். 15 நாள் பள்ளிக்கு விடுப்பு எடுக்க சொல்லிவிட்டு அவளை கவனித்துக் கொண்டனர் அங்கிருந்த பெரியவர்கள்.

ஆனால் குழலி தான் சற்று பயந்து போனாள். ஏனென்றால் இத்தனை நாள் தெரியாத சில பல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது. அனைத்து பெண்களைப் போலவே இந்த காரியங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க அதை அவள் மனம் ஏற்றுக்கொண்டது. ஆனால் சிலர் அருகில் அமரும் போது அந்த இடமே வெப்பத்தால் தகித்தது போல உணர்ந்தாள். சில பேரோட அமர்ந்திருக்கும் பொழுது மிகவும் குளுமையான இடத்தில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தாள். இந்த மாற்றம் ஏன் என்று தான் அவளால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.

தாத்தா சொல்லிக் கொடுத்த ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தாள். தாத்தா சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. நீ ஒரு நாள் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் அளவு வளர்ந்து விடுவாய். அப்பொழுது நல்லவர்கள் தீயவர்கள் என்று உணர்ந்துகொள்ள உன்னால் முடியும். குழுமையாய் காட்சி அளிப்பது அனைத்தும் உனக்கு ஏற்றது. வெப்பமாக சுடுகிறவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று தாத்தா சொன்னதோடு அவள் செய்வதற்கான சில தியானங்களையும் சொல்லிக் கொடுத்திருந்தார்.

இத்தனை நாள் அவளது மனதில் இதெல்லாம் வராமல் இருந்தது. ஆனால் இன்று அவளுக்கு அவள் என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரிந்தது. தாத்தா சொல்லிக் கொடுத்தது போல் சில பல தியானங்களையும் அவ்வப்போது செய்து வந்தாள். அவர்கள் கொடுத்த உணவுகளையும் சாப்பிட்டு வந்ததால் 15 நாளில் அவள் முழுவது மாக மாறி இருந்தாள். அவளது பேச்சு உடை நடை பாவனை எல்லாமே மாறி தான் இருந்தது.

ஒவ்வொரு நாளும் வருவாளா என்று ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தான் ராகவ். பல மாற்றங்களை வாழ்வில் சந்தித்திருந்தாலும் குழலியின் மனதிலும் ராகவின் எண்ணம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.