(Reading time: 13 - 26 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அவன் அருகில் இருக்கும் பொழுது தன்னுடைய மொத்த சொந்தமும் தன்னை சுற்றி இருப்பது போலவே அவளுக்கு ஒரு உணர்வு. அதனால்தான் ராகவ்வின் நட்பை அவள் பெரிதும் விரும்பினாள்.

இந்த நிலையில் அவன் தன்னை விட்டு பிரிந்து போகிறான் என்று சொல்லும் பொழுது அதைக் கேட்க அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் தன்னுடைய சந்தோஷத்திற்காக அவனுடைய எதிர் காலத்தை வீணடிக்க கூடாது என்று அவளும் புன்சிரிப்போடு அதற்கென நான்கு வருடம் தானே... படித்து முடித்துவிட்டு பெரிய பிஸினஸ் மேனாக வர என் வாழ்த்துக்கள் என்று கை குலுக்கினாள்.

குழலி நான் நான்கு வருடம் என்ஜினியரிங் முடித்து திரும்பி வரும்பொழுது நீயும் உன் பள்ளிப்படிப்பை முடித்து இருப்பாய் அல்லவா என்று சொல்லும்போதே எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியுடன் தலையாட்டினாள். இருவரும் தங்களுடைய அந்த படிப்புகள் முடிவதற்காக காத்திருந்தனர்.

அனேக நேரங்களில் அவள் மனம் தாத்தா சொல்லிக் கொடுத்த பழைய காரியங்களில் ஈடுபட்டது. நீ ஆற்ற வேண்டிய கடமை நிறைய இருக்கிறது பூங்குழலி என்று தாத்தா சொன்னது அவளுக்கு தெளிவாக நினைவு வந்தது. அப்படி நான் என்ன கடமையை செய்யவேண்டும் என்று அடிக்கடி அவள் யோசிக்கலானாள்.

இப்பொழுது தாத்தா சொல்லிக் கொடுத்த பல சக்திகள் பல மந்திரங்கள் தந்திரங்கள் தியானங்கள் இவை எல்லாம் ஞாபகம் வர சற்று குழம்பித்தான் போனாள். இத்தனை நாள் சாதாரண பெண்ணாக இருந்தவள் மனதில் பல கேள்விகள் எழும்ப அவள் அதிக நேரத்தை தியானத்தில் கழித்தாள்.

நான்கு வருடம் கழித்தது.

மும்பை......

அண்ணா

சொல்லு

அண்ணா இத்தனை நாள் கஷ்டப்பட்டு அந்தப் பொண்ணையும் கண்டுபிடிச்சாச்சு. நம்ம பசங்க எப்பொழுதும் அவளை ஃபாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க. இப்பவாது சொல்லுங்க. யார் இந்த பொண்ணு... எதுக்காக நாம இவ்வளவு கஷ்டப்படுகிறோம்... இப்பவாது நான் தெரிஞ்சுக்கலாமா

ப்ச்ச்..

நான் தெரிஞ்சுக்கலாம் என்று நினைச்சா சொல்லுங்க அண்ணா.

சொல்றேன் என்று பெருமூச்சு விட்ட அண்ணன், நானும் அந்த பொண்ணோட அப்பா அம்மாவும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.