(Reading time: 13 - 26 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

சயின்டிஸ்ட்டா ஒரே இடத்தில ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தோம்.

நாங்க ஒரே இடத்தில ஒர்க் பண்ணிணதால எங்க கோடிங் பற்றி அடிக்கடி டிஸ்கஸ் பண்ணுவது உண்டு.

அந்த மாதிரி நேரத்தில் தான் அவங்க புதுசா ஒரு கோடிங்ஸ் கண்டுபிடித்திருப்பதாக சொன்னாங்க.

அதாவது நம்மளோட பூமி எல்லாம் பல செயற்கை உரங்களை கலந்து மலட்டு தன்மை அடைந்து விட்டது. அதனால திரும்பவும் அதை ஒரு வளமான மண்ணாக மாற்ற சில செயல்முறைகளை கண்டு பிடிச்சாங்க...

அதோடு ஒரு கெமிக்கல் அதாவது ஃபுல்லா கெமிக்கல் தன்மை இல்லாமல் இயற்கையோடு கலந்த உரங்களை தயாரிப்பதற்காக கண்டுபிடிச்சாங்க. அதனால மனிதர்களுக்கும் சரி விலங்குகளுக்கும் சரி அங்கு வாழ்கிற சிறிய உயிர்களுக்கு கூட எந்த ஒரு கேடும் வராது. அப்படின்னு சொல்லி அவங்க கண்டுபிடிச்சாங்க. ஆனால் அந்த பார்முலாவை அவர்கள் யாருக்கும் காட்டாமல் சீக்ரெட்டா வச்சிருந்தாங்க.

காரணம் வேற யாராவது மிஸ் யூஸ் பண்ணகூடாது அப்படிங்கறதுதான். அதுலயும் இன்னும் பல ஆராய்ச்சிகள் இருந்ததுனால அவங்க அந்த பார்முலா கோடிங்கை ஹைட் செய்து வைத்து விட்டார்கள்.

ஓ... அப்புறம் அண்ணா

நம்ம கம்பெனி பற்றி உனக்கு தெரியும்தானே.. நாங்க சயின்டிஸ்ட் சேர்ந்து செய்யும் போது சில ஃபார்முலா கோடிங் டிஸ்கஸ் பண்ணுவோம். சில விஷயங்களை அலசி ஆராயும் போது அதுல கிடைக்கிற சில தகவல்களை வச்சி நான் யாருக்கும் தெரியாம தனியா இந்த இடத்தில அதாவது இப்ப நான் இருக்கிற இந்த இடத்தில் ஒரு சின்ன ஆராய்ச்சிக் கூடத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக நான் நிறைய காரியங்களை செய்ய ஆரம்பிச்சேன்.

நான் புட் பிராடக்ஸ் உருவாக்குற பேக்டரி ஸ்டார்ட் செய்தேன். அதாவது இது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனா அதெல்லாம் வெளியே தெரிவதற்கு நாட்களாகும். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் புற்றுநோயால் பாதிக்கப் படலாம். சில பேருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படலாம். சில பேருக்கு வாதங்கள் ஏற்படலாம். பல பக்கவிளைவுகள் இருந்தது. ஆனாலும் அதை விட பெரிய விஷயம் என்னன்னா அதுல இருக்கிற அந்த பக்க விளைவுகளை எந்த ஒரு கருவி கொண்டும் கண்டுபிடிக்க முடியாது. அதுதான் பிளஸ். அதோட அதை தொடர்ந்து சாப்பிட்டு விட்டு இருக்கிறவங்க அதை விடும்போதுதான் அதோட பக்க விளைவுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். அதனால நமக்கு எந்த பாதிப்பும் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.