(Reading time: 13 - 26 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அவங்களோட பொண்ணுகிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லி வளர்த்திருக்காங்க. அதுமட்டுமில்லாம இறந்து போனவளோட பையன் அதாவது அந்த குயிலியோட மாமா பையன் கார்த்திக். சின்ன வயசுல இருந்தே எல்லா தகவலையும் மெமரியில் வைத்து இருந்தான். ஏனென்றால் அவனுக்கு ஐக்யூ ரொம்ப அதிகம். 5 வயதிலேயே 40 வயது சயின்டிஸ்ட் க்கு தேவையான அத்தனை அறிவையும் பெற்றிருந்தான். கம்ப்யூட்டரில் ஃபார்முலா கோடிங் செட் பண்றது எல்லாம் அந்த பையனுக்கு தெரியும் என்று எங்களுக்கு தெரிய வந்தது.

இந்த குயிலிக்கு அந்த விவசாயம் பத்தின விவரங்கள் மட்டும் தான் தெரியும். அதனால் அவளை தீர்த்துக் கட்டி விட்டால் அந்த விவசாயம் சம்பந்தமான அனைத்தும் அழிந்துவிடும்.

ஆனால் பல பார்முலாக்களை கார்த்திக் அறிந்திருந்ததால் அவனை எங்கள் பக்கமாக இழுத்து உபயோகிக்க திட்டம் செய்தோம். அதில் ஒன்றுதான் ராணுவத்திற்காக பல அணு ஆயுதங்களை செய்து கொடுப்பதற்கு பார்முலாக்களை அவர்கள் உருவாக்கி இருந்தார்கள். அந்த பார்முலாக்கள் மட்டும் நம் கையில் கிடைத்தால் அதை எதிரி நாடுகளுக்கு விற்று இன்னும் பல கோடி பணம் சம்பாதித்து விடலாம் என்று எண்ணி அந்த பையனை மட்டும் காப்பாற்ற திட்டமிட்டோம்.

அவனை காப்பாற்ற முயற்சி செய்வதற்காக நாம் சென்ற போது அந்தக் கப்பலும் நம்ம கப்பலும் பெர்மூடா எல்லைப் பகுதிக்கு கொஞ்சம் முன்னாடி இருந்தது என்றுசொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே எனக்கு முக்கியமான இன்னொரு வேளை வந்துவிட்டது. மீதி தகவலை நாம் அப்புறம் பேசிக்கொள்வோம்‌ இப்பொழுது நான் ஏற்கனவே சொல்லி இருக்கிற காரியத்தை செய்து முடி என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான் அந்த பாஸ் என்பவனின் அண்ணன்.

அதே நேரத்தில் சென்னையில்...

ராகவ் பூங்குழலி இருவரும் பலவித எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர். குழலி தன் பள்ளிப்படிப்பை முடிக்க ராகவ் தன்னுடைய என்ஜினீயரிங் முடித்து இந்தியா திரும்பி வந்தான். அவன் வரும் நாள்... வரும் பொழுது.. எதையும் குழலி அறியவில்லை. ஆனால் அவன் நிச்சயம் வருவான் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்தவள் அதற்குமேல் ஆசிரமத்தில் தங்க முடியாத சூழ்நிலையில் தனக்கென்று தனியாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவள் அருகில் இருந்த ஒரு சிறிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாள். ஏனோ அவளுக்கு மேற்கொண்டு படிக்க விருப்பமில்லை. பகுதி நேரமாக தன்னுடைய தேவைக்கு உழைத்தாள்.

அவளுடைய திறமையை கண்டு அந்த நிறுவனம் அவளை அவளுடைய விருப்பத்திற்கு ஏற்ப நல்ல ஒரு சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்திக் கொண்டது. ஏனென்றால் ஒரு நபர் நான்கு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.