(Reading time: 11 - 22 minutes)
Uyiril kalantha urave
Uyiril kalantha urave

இன்றி கலங்கின அவர் கண்கள்.

"நீ..நீ உங்கம்மா மாதிரி இல்லை. அவ ரொம்ப திறமைச்சாலி!" என்ற கூற்றை அவர் பதிவேற்ற குழம்பியவனாய் எழுந்து நின்றான் அசோக்.

"காலையிலே எழுந்துவிடுவாள்! சூரியன் உதித்தாலும், இல்லைனாலும் அவளைத் தடுக்க முடியாது. பாரப்பட்சம் பார்க்காமல் எல்லா வேலையும் இழுத்துப் போட்டுட்டு செய்வா! அவ அந்தக் காலத்திலே பன்னிரண்டாவது வரைக்கும் படித்தாள் தெரியுமா? ரொம்ப புத்திசாலிப் பொண்ணு! அவளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்து மகாராணி மாதிரி வாழ வைக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, ஏன்தான் அவள் அந்த ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிட்டாளோ!" அத்தனை ஆண்டுகளாய் சேகரித்த வேதனையெல்லாம் கண்ணீராய் உருமாறி அவன் முன் சமர்ப்பிக்கப்பட, உடைந்துப் போனான் அசோக்.

"அவ என் பேச்சை மீறிட்டான்னு கோபத்துல அவளை நான் தண்டிக்கப் பார்த்தேன். ஆனா அவ, கடைசி வரைக்கும் என்னை ஒருமுறை கூட பார்க்காமல் நிரந்தரமாக என்னைத் தண்டித்துவிட்டாள்." என்றதும் அவன் விழிகளுமே கலங்கிப் போயின.

"என் பொண்ணு இல்லையா! அந்த வைராக்கியம் அப்படியே தானே இருக்கும்.சரி...சொல்லு...அவ..அவ என்னைப் பற்றி ஏதாவது உன்கிட்ட சொல்லிருக்காளா?" தன்னையே மறந்தவராய் ஆசையாக அவனது கன்னத்தினைப் பற்றி அவர் கேட்க, அவன் மனமெல்லாம் இளகிப் போனது. கண்ணீரில் கரைந்தவனாய்,

"நீங்கத்தான் அவங்க கடவுள்னு சொல்லிருக்காங்க!" என்று அவன் கூற, எந்தப் பெண்ணை பல காலங்கள் முன்பாக வையமே தவறாக பேசி தூற்றியதோ அவளின் மாண்பு அனைவரின் கௌரவத்தினையும் தன் பாதத்தில் வைத்து உயர்ந்து நின்றது. அப்பதிலால் நொறுங்கிப் போனவர் கதறி அழ தொடங்க, செய்வதறியாது அவரை தன்னோடு அணைத்துக் கொண்டான் அசோக்.

"என்னை மன்னித்துவிடுப்பா!நான் எவ்வளவோ பாவம் பண்ணிட்டேன். அந்தக் கடவுள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய வரத்தை நானே தூக்கி எறிந்தேனே! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்தப் பாவத்தை எப்படி போக்குவேன்?" என்று அவர் கதறி அழதவண்ணம் பாறையினையும் உடைத்துவிடும் சக்தி படைத்ததாய் விளங்கியது.

"அழாதீங்க பாட்டி!ப்ளீஸ்...! அம்மாக்கு உங்க மேலே எந்தக் கோபமும் இல்லை. உங்களைப் பார்க்கணும்னு தான் பாட்டி நானுமே வந்தேன். என்னை...என்னை..உங்க பேரனா ஏற்றுப்பீங்களா?" அப்பாவியாய் அவன் வினவ, பூரித்துப் போனது பார்வதியின் மனம். மனதார உச்சி முகர்ந்து அவன் நெற்றியில் முத்தமிட்டார் அவர்.

இருள் நீங்க ஔிர்ந்த அன்பென்னும் ஆதவன் இருளை எல்லாம் விலக்கிவிட, கண்ணீருக்கும் வேலையற்றுப் போன நொடியில் அகமலர்ந்தவராய் தன் பெயரனுக்கு வலிக்காதப்படி ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.