(Reading time: 11 - 21 minutes)
Marappin Maraven Ninnai Maranthariyen
Marappin Maraven Ninnai Maranthariyen

எந்த விஷயத்தையும் உடனேயே கிரகித்து விடுவான். அதனால் சில கடினமான பாடங்களை அவன் அவர்களுக்கு சொல்லித் தருவான்.

ஷீலாவை பொறுத்தவரை ஃபெலிக்ஸுடன் அவள் நட்பாக பழகுவது போலவே வசுமதியும் பழகுகிறாள் என்று நினைத்தாள். ஆனால் ஃபெலிக்ஸும் வசுமதியும் வேறுவிதமாக மாறிப் போனதை அவள் அறியவேயில்லை….

அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது ஷீலாவிற்கு புரியாமலே போய்விட்டது. அவளுக்கு அவளுடைய மனதையே புரிந்து கொள்ள முடியாதபோது அருகிலிருப்பவர்களை எப்படி கவனிக்க முடியும்.

மருத்துவ படிப்பு முடிந்து அவள் திருச்சூர் கிளம்பி சென்றாள்.  அதுதான் அவளுடைய சொந்த ஊர். இனி முன்பு போல ஃபெலிக்ஸ் வீட்டிற்கு செல்ல முடியாது என்று வருத்தம் இருந்தது. அவளுக்கு ஃபெலிக்ஸ் தந்த பிரிவுபசார விருந்திற்கு  மேத்யூஸும் வந்தபோதுதான் அவளுக்கு தன்னுடைய மனம் புரிந்தது. அவளுக்கு ஃபெலிக்ஸை பிரிவதில் சிக்கல் இல்லைமேத்யூஸை பார்க்காமல் இருப்பதில்தான் பிரச்சினை…  ஆனால் அவனுக்கு அதுபோன்ற ஈர்ப்பு ஷீலாவிடம் இல்லை என்பது புரிந்து போனது. மேலும் இருவருக்கும் இடையே இருந்த  பொருளாதார ஏற்றதாழ்வு அவளுடைய காதலை மனதின் ஆழத்திற்குள் தள்ளி புதைத்து. அவள் எதையும் சொல்லிக் கொள்ளாமல் அவள் திருச்சூர் சென்று விட்டாள்.

அதன் பிறகு பிறிதொரு நாளில் ஃபெலிக்ஸும் வசுமதியும் யாருக்கும் எதையும் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டார்கள். ஏக் துஜே கேலியேவின் பாதிப்பு இருந்த காலம் அது….காதலை பிரிக்க முயற்சி நடக்கலாம் என்று எண்ணி அவர்கள் இந்த முடிவை எடுத்தனர். திருமணம் முடித்து பெற்றோரிடம் வந்த ஃபெலிக்ஸை பார்த்து குடும்பமே அதிர்ந்தது.

அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டை விட்டு வெளியேறியவர்களை  வசுமதியின் குடும்பம்  ஆதரிக்க அவன் அவர்களுடன் சேர்ந்து விட்டான்.

மேத்யூஸால்தான் இதை தாங்கவே முடியவில்லை. இந்த விஷயத்தை மறைத்திருக்கிறாள் என்று ஷீலாவின் மீது கோபம் திரும்பியது  திருச்சூருக்கு அவளை தேடி சென்றபோது அவளுக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது. அவளை அழித்தொழிக்க வேண்டும் என்று அவனுக்கு வந்த கோபத்தில் ஷீலா அவனை ஏமாற்றி விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்கிறாள் என்று சண்டையிடதிருமணம் நின்று போனது.

ஊரார் முன்பு அவமானப்பட்டாலும்… முதலில் நடப்பதை நினைத்து சந்தோஷப்பட்ட ஷீலாவிற்கு பிறகுதான் மேத்யூஸின் பழி வாங்கும் நடவடிக்கை பிடிபட்டது. ஃபெலிக்ஸ் வசுமதியின் திருமண விஷயத்தை சொல்லி அவளுடைய திருமணத்தை நிறுத்திய

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.