(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 15 - ஜெய்

கப்பட்ட வாக்குவாதங்கள், பெரியவர்களின் மனக்கசப்பு என்று பல போராட்டங்களுக்கு பின் மைத்தி ரஞ்சிக்கோப்பை விளையாட பஞ்சாபை வந்தடைந்தாள்....

மைத்திக்கும், துளசிக்கும் அனைத்தும் புதியதாக இருந்தது.... இதுவரை குடும்பத்தார் துணை இல்லாமல் இருவரும் எங்கும் சென்றதில்லை...  உணவு, மொழி என்று அனைத்தும் வித்தியாசமாக இருந்தது.... கூட இருப்பவர்கள் தமிழ் பேசினாலும் மற்றவர்கள் ஹிந்தி அல்லது பஞ்சாபியிலேயே உரையாடினர்....

இருப்பதிலேயே இளையவர்கள் இவர்கள் இருவரும்தான்.... இவர்கள் இருவருக்கும்தான் இது முதல் போட்டி, மற்ற அனைத்து போட்டியாளர்களும் ஏற்கனவே விளையாடியவர்கள்...  மற்ற போட்டிகளில் இதில் விளையாடிய சிலரை கண்டிருந்தாலும் பேசியதில்லை.... எனவே பயிற்சி ஆரம்பித்ததில் இருந்தே இருவரும் சற்று தனிமையிலேயே இருந்தனர்... இவர்களாக சென்று பேசினாலும் ஒற்றை வரி பதில்களே மற்றவரிடத்திலிருந்து வந்தது...  பயிற்சியின்போது துளசியும், மைத்தியும் அபாரமாக விளையாடியதும் அவர்களை மற்றவர்கள் பொறாமையால் ஒதுக்கி வைக்க காரணமாகியது.... ஆக மொத்தம் இருவரையும் குடும்பத்தினருடன் இல்லாத தனிமை சற்று வாட்டத்தான் செய்தது...

முதல் போட்டியில் அனுபவமிக்கவர்களே ஆடட்டும் என்று பயிற்சியாளர் நினைத்ததால் ஏற்கனவே விளையாடிய வீராங்கனைகளே ஆடினர்....  கடுமையான போட்டிக்கு பின் தமிழ்நாடு முதல் போட்டியை வென்றது.... இரண்டாவது போட்டி, டெல்லியுடன்    முதல் போட்டியில் வெற்றி பெற்று விட்டதால் இதில் அனுபவமிக்க வீராங்கனைகளுடன் புதியவர்களையும் விளையாட வைக்கலாம் என்று நினைத்த பயிற்சியாளர் துளசியையும், மைத்தியையும் களமிறக்கினார்....  போன முறை கோப்பையை வென்றது டெல்லி அணிதான்....  இந்தியாவின் சிறந்த வீரர்கள் இருக்கும் அணியும்கூட..... போட்டியும் கடுமையாக இருக்கும் என்று தெரிந்தாலும் புதியவர்களுக்கு அனுபவமாக இருக்கும் என்றே அவர்களை களமிறக்கினார் பயிற்சியாளர்.....

மைத்திக்கும், துளசிக்கும் முதல் போட்டி... ஆண்கள் கிரிக்கெட் அளவிற்கு பெண்கள் கிரிக்கெட்டிற்கு மக்கள் வருவது அரிது.... எனவே சொற்ப மக்களே வந்திருந்தனர்.... அதனால் மற்ற போட்டிகள் போலவே பெரிய பதட்டம் இல்லாமல் ஆடுகளம் புகுந்தனர் துளசியும், மைத்தியும்....  முதலில் தமிழ்நாடு பந்தடித்தது.... 

துளசிக்கு முதல் போட்டி, எனவே சற்று பதற்றமாகவே மைதானத்தில் நுழைந்தாள்....  அவளுடன் களமிறங்குபவளும்  துளசிக்கு முற்றிலும் புதியவளே... ஆரம்பம் முதலே  இருவருக்கும் சரியான புரிதல் இல்லை.... கிரிக்கெட்டில் நாம் எந்த அளவிற்கு நன்றாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.