(Reading time: 10 - 19 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

ஆடினாலும், நம்முடன் களத்தில் இருப்பவரும் ஒத்துழைத்தாலன்றி ஓட்டங்கள் எடுப்பது சாத்தியப்படாது.... துளசி  பந்தடித்துவிட்டு  மறுபக்கத்திற்கு ஓட நினைக்கும்போதெல்லாம் எதிர்கோட்டில் இருப்பவள் சற்று கூட நகரவில்லை...  அதே போல் அந்த பெண் ஆடும்போது சுலபமாக ரன் எடுக்க முடியும் என்ற நிலையிலும் ஓட ஆரம்பிக்காமல் இருந்தாள்...  பொறுமையிழந்த துளசி அதன் பின் அடித்து ஆட ஆரம்பித்தாள்.... நான்கும், ஆறுமாக அடிக்க ஆரம்பிக்க பயிற்சியாளர் சற்று பதட்டமடைந்தார்.... துளசியின் பந்தடிக்கும் முறை சற்று தாறுமாறாக இருந்தது....   பதட்டம், கோவம் ஆகியவற்றுடன் ஆடியதால் துளசியால் இருவது ஓட்டத்திற்கு மேல் எடுக்க முடியவில்லை... 

சற்று அளவு குறைவாக வீசப்பட்ட பந்தை அடித்த துளசி ஓட ஆரம்பிக்க , எதிர் புறமிருந்து வரவேண்டிய பெண் வராததால் துளசி ரன் அவுட் ஆகிவிட்டாள்... இதில் துளசிக்கு சற்று மனவருத்தமே....  துளசி இதுவரை விளையாடிய விளையாட்டுக்களில் எடுத்த குறைந்தபட்ச  ரன் முப்பது... முதன் முதலில் விளையாடும் பெரிய போட்டியில் அதைக்கூட தொட முடியவில்லை என்ற வருத்தம் அவள் முகத்தில் தெரிந்தது....  மைத்தி அவளை தேற்றினாள்...  ஆனால் துளசியுடன் ஆடும்போது அத்தனை அழிச்சாட்டியம் செய்த பெண்  அதன் பின் வந்தவர்களுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் விளையாடி அரை சதம் அடித்தாள்.....  தமிழ்நாடு ஐம்பது ஓவர்களில் ஆறு விக்கட்டுகள் இழந்து  நூற்றி எண்பது ரன் எடுத்திருந்தது....

அடுத்து டெல்லி அணி பந்தடிக்க களமிறங்கியது... டெல்லியின் துவக்க ஆட்டக்காரர் இந்திய அணியின் துவக்க வீராங்கனை.... எனவே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுடன் ஆட்டம் ஆரம்பித்தது...  தமிழக அணியில் ஆறு பந்து வீச்சாளர்கள் இருந்தனர்... எனவே மைத்தியைத் தவிர மற்ற அனைவருக்கும் வாய்ப்பு தலைவியால் கொடுக்கப்பட்டது....  துளசி மைத்தியை சமாதானப்படுத்தியபடியே இருந்தாள்.... முப்பது ஓவர்கள் முடிந்த நிலையில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த டெல்லி அணி நூற்றி இருபது ரன்கள் எடுத்திருந்தது....  அடுத்த இருவது ஓவர்களில் அறுபத்து ஒரு ரன்கள் என்ற  நிலையில் மைத்தியை பந்து போட அழைத்தாள் தலைவி.... 

இரண்டு பக்கத்திலும் நன்றாக செட் ஆன வீராங்கனைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்....   மைத்தியின் பந்து வீசும் திறன் அவர்களுக்கு சற்று சவாலாகவே இருந்தது...  எனவே இருவருமே அடித்து ஆடாமல் தற்காப்பு ஆட்டமே ஆடினர் ....   மூன்று ஓவர்கள் மைத்தி போட அவர்களால் அதில் ஆறு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.....   அதன் பின்னர் அவளுக்கு பந்து போட தலைவி அனுமதி வழங்கவில்லை....   அடுத்த எட்டு ஓவர்களில்  மிக சுலபமாக டெல்லி அணி வெற்றிபெற்றது..... 

துளசியும், மைத்தியும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியே தோல்வியில் முடிந்ததில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.