பிரணயின் விழிகள் இலக்கில்லாமல் வேகமாக கடந்துப் போய் கொண்டிருந்த காட்சிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அவனின் மனதுக்குள் பல விதமான யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது.
பத்து வருடங்களில் எத்தனையோ வெற்றிப் படிகளை ஏறி மேலே வந்து விட்டான். ஆனால் இது வரைக்கும் எதற்கும் அவன் இத்தனை பிரயத்தனப் பட்டு திட்டமிட்டது இல்லை. இது பெரிய விஷயம். மிகப் பெரிய விஷயம். இது அவனின் வாழ்க்கையின் குறிக்கோள்.
ஒருத்தரை அழிப்பதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்துக் கொள்ள முடியுமா???
அவனுடைய இதழ்கள் ஏளனமாக வளைந்தது.
“பாண்டியா உன் வாழ்க்கையோட குறிக்கோள் என்ன?”
ஹைவே மீது கவனம் வைத்து வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த பாண்டியன், எஜமானனின் எதிர்பாராத கேள்வியால் குழப்பம் அடைத்து ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தான்.
“சொல்லு பாண்டியா. உன் வாழ்க்கையோட குறிக்கோள் என்ன?” – பிரணய் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டான்.
“என் குடும்பத்தோட நிலையை உயர்தணும் சார். என் மனைவி சந்தோஷமா இருக்கனும். குழந்தைங்க என்னை மாதிரி இல்லாம, உங்களை மாதிரி பெரிய ஆளா வரணும்” – பாண்டியன் அடுக்கிக் கொண்டே போனான்.
“சபாஷ் பாண்டியா. நீ நல்ல குடும்ப தலைவன்னு காட்டிட்ட. ஹைதராபாத் போன உடனே எனக்கு ஞாபகப் படுத்து. உனக்கு சம்பளத்தை டபுளாக்க சொல்றேன்.”
“சார்” – பாண்டியன் நம்ப முடியாமல் திரும்பவும் கண்ணாடியில் எஜமானனை பார்த்தான்.
“என்னைப் பார்த்துட்டு இருக்காம, ரோடை பார்த்து ஓட்டு” – பிரணய் கட்டளை இட்டான்.
பாண்டியன் கருமமே கண்ணாக எஜமானன் சொன்னதை செய்தான்.
பிரணய் தன்னுடைய யோசனைக்கு திரும்பினான். இந்த ஒரு வேலையை முடித்து விட்டால் அதற்கு பிறகு அவனுக்கு விடுதலை. தணலாக கொதிக்கும் நிலையில் இருந்து நிரந்தர விடுதலை.
சாலையின் ஓரமாக ஒதுங்கி நிறுத்தப் பட்டிருந்த விலை உயர்ந்த கார் பிரணயின் கவனத்தை கவர்ந்தது. அதன் பானேட் திறந்திருந்தது. ஒருவன் அதற்குள் தலையை நுழைத்து நின்றிருந்தான்.
“பாண்டியா காரை நிறுத்து. கார் ரிப்பேர் போல இருக்கு. உதவி வேணுமான்னு கேட்கலாம்” – பிரணய்
“யாருன்னே தெரியாதவங்க கிட்ட எதுக்கு சார் வம்பு?” – பாண்டியன் காரின் வேகத்தை