எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
அந்த நோட்டு புத்தகத்தில் இருந்த பக்கங்களை புரட்ட தொடங்கிய ராமின் மனக்கண்ணில் காட்சிகள் விரிந்தது.
"அப்பா..." முகம் முழுதும் பூரிப்புடன் ஓடிவந்த தமிழ்செல்வியை வாஞ்சையாக பார்த்தார் ராமநாதன்.
"என்னடா குட்டிமா காலேஜ் போக ரெடியா? கெளம்பலாமா???" அவளின் தலையை வருடியவாறு கெட்டவரை இடுப்பில் கைவைத்தபடி முறைத்தாள் தமிழ்செல்வி.
"அப்பா...நான் என்ன சொன்னேன் நேத்து??? எல்லாம் மறந்துட்டிங்க" என்றபடி சிணுங்கியவளை கண்டு சிரித்த ராமநாதன் "ஹஹஹஹ மறக்கலைடா இருந்தாலும் என் பொண்ணு முதல் நாள் காலேஜ் போகப்போறா அதுவும் நம்ம மெடிக்கல் காலேஜ்ல படிக்க போறா.நான் வந்து பாக்காம இருந்தா எப்படிடா...நீ நம்ம பிஸிநெஸ்க்கு கொடுக்கற ஐடியா எல்லாம் பாத்து நம்ம பிசினஸ் எல்லாம் மேனேஜ் பண்ற மாதிரி படிப்பு எடுக்க சொன்னேன். ஆனா அம்மா மாதிரி யாரும் உடம்பு சரி இல்லாம கஷ்டப்படக்கூடாது டாக்டர் தான் ஆவேன்னு சொன்ன. சரி நம்ம காலேஜ்லயே சேர்த்துக்கோனு சொன்னேன். நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் எழுதி தான் சீட் கெடைக்கணும்னு சொன்ன" என்றவரின் கைகளை பற்றியவள் "ஆமாம் அப்பா. எனக்கு எண்ட்ரன்ஸ் நல்ல மார்க்ஸ் கெடைச்சு சென்னைல இருக்கற மெடிக்கல் காலேஜ்ல சீட் கிடைச்சுது இருந்தாலும் நான் இல்லாம என் செல்ல அப்பா கஷ்டப்படுவாரேன்னு தான் நம்ம காலேஜ்லயே ஜாயின் பண்ணிருக்கேன். ஆனா நான் இப்படி என்னோட வசதியை எல்லாம் காட்டிட்டு போனா என்கூட யாரும் உண்மையா பழக்கமாட்டாங்கப்பா. நான் என் காலேஜ் லைப்பை மத்தவங்களை என்ஜாய் பண்ணனும்னு நெனைக்கிறேன். சோ ப்ளீஸ் பா...எனக்கு ஒரு குட் லக் சொல்லி அனுப்புங்க போதும்" என்றவளை பார்த்த ராமநாதனுக்கு பெருமையாக இருந்தது. அவள் அபப்டியே அவளின் அம்மாவின் பிரதி பிம்பமாக இருந்தாள். அழகு அறிவு பண்பு நேர்மை என எல்லாமே அவளிடம் இருந்தது. ஒருமுறை கூட பிடிவாதம் பிடித்தது இல்லை. அவள் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி காரியம் சாதிக்க எண்ணியதில்லை.
அவர் பெருமையுடன் அவளை பார்த்து கொண்டிருக்கையிலேயே "வணக்கம் சார்" என்றபடி வந்தான் தமிழ்மாறன்.
"வாப்பா மாறா.. உனக்கும் இன்னைக்கு தான காலேஜ்ல முதல் நாள். நீ என்ன கோர்ஸ் எடுத்திருக்க? " என்றவருக்கு பணிவாக பதில் சொன்னான் தமிழ்மாறன்.
Ahem.ahem dairy padikuradhukke nama hero.sir.kku poramaiyakkum 😍😍😍😁 seli form.kk vandha ivarai vachi seivanga pole irukke 😁😁😁 look forward to read the remaining part of selvis fb....
Thank you.