(Reading time: 16 - 31 minutes)
Priyamaanavale
Priyamaanavale

"நான் பயோ டெக் எடுத்திருக்கேன் சார்" என்றவனின் அருகே வந்த தமிழ்செல்வி "ஒழுங்கா எண்ட்ட்ரன்ஸ் எழுதி இருந்தா என் கூடவே எம்பிபிஎஸ் சேர்ந்துருக்கலாம்" என்றபடி அவனை முறைக்க அவன் மெலிதாக புன்னகைத்தான்.

"சரிப்பா டைம் ஆச்சு நாங்க கெளம்பறோம்" என்றபடி இருவரும் செல்ல,அவர்களையே பார்த்தபடி நின்ற ராமநாதனின் அருகே வந்தார் அவரின் இரண்டாவது மனைவியான செண்பகவல்லி.

"விஸ்வநாதன் இறந்ததுக்கு அப்பறமும் எதுக்கு இந்த பையனை இங்க தங்கவெச்சு படிக்கவெக்கணும்?" என்றவரை பார்த்த ராமநாதன் "விஸ்வநாதன் என்கிட்டே இருப்பது வருஷமா வேலை பார்த்தார். எத்தனையோ பசங்களை படிக்க வைக்கும்போது அவருடைய பையனை எப்படி விடமுடியும்? விஸ்வநாதனுடைய மனைவி ஒரு கவர்மெண்ட் ஸ்கூல்ல தமிழ் டீச்சர். அவங்க சம்பாத்தியத்துல தான் குடும்பம் நடக்குது. இந்த பையனை கொஞ்சம் கையை பிடிச்சு தூக்கி விட்டா அந்த குடும்பமே தலை நிமிரும்" என்றவரின் பதிலில் மெலிதாக புன்னகைத்த செண்பகவல்லி "தூக்கி விடற கையை கடிக்காம இருந்தா சரி" எனவும் "அந்த பையன் புத்திசாலி. அவனுடைய இடம் எதுன்னு அவனுக்கு தெரியும்" என்றவர் அங்கிருந்து கிளம்பினார்.

கல்லூரி செல்லும் பேருந்தில் அருகே அமர்ந்தபடி ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்த தமிழ்செல்வியை பார்த்த தமிழ்மாறன் "அவ்ளோ பெரிய காரை எல்லாம் விட்டுட்டு இப்படி காலேஜ் பஸ்ல வர்ற. என்னால உன்னை புரிஞ்சுக்கவே முடியல தமிழ்" எனவும் அவன் புறம் திரும்பிய தமிழ், "உன் மரமண்டைக்கு என்னை புரிஞ்சுக்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம். அதனால இல்லாத மூளையை ரொம்ப கசக்காம என்ன கேக்கணுமோ அதை நேரடியா கேளு" என்றவளை முறைத்தான் மாறன்.

"உன்கிட்ட நான் இதையே ஒரு ஆயிரம் முறை கேட்டுட்டேன். ஆனா நீ சொல்ற பதில் புரியறமாதிரி இருந்ததே இல்லை. ஆனாலும் நான் விக்ரமாதித்தன் கழுத்துல தொங்கற வேதாளம் போல திரும்ப திரும்ப முயற்சி பண்ணிட்டே தான் இருக்கேன். அப்பா கூட இங்க வந்தப்போ இவ்ளோ பெரிய வீட்ல இருக்கற உன்னை முதல் முதல்ல பார்த்தப்போ எனக்கு அந்த கால இளவரசி ஞாபகம் தான் வந்துச்சு. ஒதுங்கி போகலாம்னு நான் நெனைச்சேன் ஆனா நீ உன் லெவெல்ல  இருக்கற பிரெண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டு என் கூட சேர்ந்து படிச்ச. என் கூட ஸ்கூலுக்கு போன. இது தானான்னு நினைக்கும்போது பிசினஸ் எல்லாம் பார்த்துக்க மாட்டேன். படிச்சு சொந்த முயற்சில தான் டாக்டர் ஆவேன்னு இந்த கோவை டிஸ்ட்ரிக்ட்லயே பர்ஸ்ட் மார்க் வாங்குன. நெறய வசதியான பொண்ணுங்க கிட்ட இருக்கற எந்த ஹெபிட்டும்

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.