(Reading time: 16 - 31 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நான் உங்களை கவனிச்சது இல்லை. தமிழ்மாறன் கூட இருந்தா எனக்கு கவனம் வேற எங்கயும் போகாது... ஏன்னா..." அவள் எப்போதும் மற்றவர்களிடம் சொல்லும் காரணத்தை போல இவனிடம் சொல்லலாம் என முடிவு செய்து சொல்ல துவங்க "ஏன்னா நீ அவனை லவ் பண்ற...அதுவும் ஸ்கூல்ல இருந்தே... அவனுக்கு தான் அது புரியவே இல்லை. இங்க வந்த முதல் நாள்ல தான் நீயே அவன்கிட்ட உன் மனசை நேரடியா சொல்லிருக்க கரெக்ட்டா?" அவள் சொல்ல துவங்கியதை முரளி சொல்லி முடிக்க, அவள் அவனை ஆவென பார்த்தாள்.

"என்ன ஷாக்காயிட்டே போல... எல்லார் கிட்டயும் சொன்ன காரணத்தை என்கிட்டே சொல்லாத தமிழ். எனக்கு எல்லாம் தெரியும். சோ நான் சொன்ன ஐ லவ் யுக்கு நீ எனக்கு பதில் சொல்லு...வேணா ஒரு நாள் டைம் எடுத்துக்கோ...." என்றவன் அங்கிருந்து நகர, இந்த நேரம் பார்த்து உடன் இல்லாமல் போன தமிழ்மாறனை மனதிற்குள் திட்டி தீர்த்தாள் தமிழ்செல்வி.

கன்னத்தில் கையை வைத்தபடி தமிழ்செல்வி சோகமாக அமர்ந்திருக்க அவளை பார்த்து அடக்கமுடியாமல் சிரித்து கொண்டிருந்தான் தமிழ்மாறன்.

"அப்போ அந்த முரளிக்கு பயந்து நீ ரெண்டு காலேஜ்க்கு லீவ் போட்ருக்க... உன்னை என்ன பண்றது??? ஆமாம் இப்போ நான் லீவுல இருந்து வந்தா மட்டும் என்ன பண்ண முடியும்? நான் என்ன சினிமா ஹீரோவா அவனை அடிச்சு ஓட விட???" புரியாதவனை போல தமிழ்மாறன் கேட்க, "நீ இப்போ பேசாம இருக்க போறியா இல்லையா?" என தமிழ்செல்வி முறைக்க, "தமிழ், இதுக்கு ஒரு சிம்பிள் சொல்யூஷன் இருக்கு. சொல்லட்டுமா?" என்றவனை ஆர்வமாக பார்த்தாள் தமிழ்செல்வி.

"நீ யாருனு சொல்லிட்டா அவனே ஓடிடுவான். அதை விட்டுட்டு" தமிழ்மாறன் சொல்ல, "எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தவா? இது மட்டும் நான் சொன்னா காலேஜ் கேம்பஸ் முழுக்க பரவிடும் விஷயம். அப்பறம் யாரு என்கூட உண்மையா பழகரா யாரு ஆதாயத்துக்காக பழகராங்கனே  தெரியாது...வேற ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு" தமிழ்செல்வி சொல்லவும் சற்று யோசித்த தமிழ்மாறன் "எனக்கு பிடிக்கலைனு சொல்லிடு" என்றான்.

"பிடிக்கலைனு சொன்னா சரி ஓகே அப்படினு சொல்லிட்டு போயிடுவானா? அவனை பார்த்தா அபப்டி தெரியல…ஐ திங்க் ஹி ஐஸ் சின்சியர்..." அவள் மீண்டும் புலம்ப "அப்போ ஓகே சொல்லிடு" தமிழ்மாறன் சொல்லிமுடிக்கும் முன் அவனை அடிக்க தொடங்கி இருந்தாள் தமிழ்செல்வி.

"என்னை பத்தி தெரிஞ்சும் நீ எப்படி இப்படி பேசலாம்" என்றபடி அவனை அடிக்க, "ஐயோ சும்மா தான் சொன்னேன் ஆளை விடு அம்மா தாயே" தமிழ்மாறன் கத்த அவனை அடிப்பதை

22 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.