(Reading time: 16 - 31 minutes)
Priyamaanavale
Priyamaanavale

நிறுத்தியவள் "எவ்ளோ பெரிய அழகனா இருந்தாலும் சரி இந்த தமிழ்செல்வி ஓகே சொல்லமாட்டா... எனக்கு என் அப்பா தான் மாப்பிளை பாக்கணும்...அவர் பேச்சை மீறி நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்" என்றவள் பார்வை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஒரு திரைப்பட காட்சியில் பதிந்தது. அவளது முகத்தில் மர்ம புன்னகை மலர அதை கண்ட தமிழ்மாறன் "ஏதோ ஐடியா பண்ணிட்டா போலவே" என்றபடி அவளை பார்க்க "எனக்கு எப்படி இந்த விஷயத்தை  ஹேண்டில் பண்ணனும்னு ஒரு ஐடியா கிடைச்சிடுச்சு" எனவும் அந்த காட்சியை டிவியில் பார்த்த தமிழ்மாறனுக்கும் அவளின் திட்டம் புரிய தலையில் கையை வைத்தான்.

அடுத்த ஒரு வாரம் அவளின் திட்டப்படி தமிழ்செல்வியும் தமிழ்மாறனும் முரளியின் கண்களில் படும்படி அவன் போகும் இடங்களில் எல்லாம் சென்றனர். அவன் கண்முன்னால் தமிழ்மாறனை வைத்து பார்க்கும் பொருட்களை எல்லாம் இஷ்டத்திற்கு வாங்கி குவித்தாள்.

"உன் காசை என்கிட்டே கொடுத்து ஏதோ நான் தான் செலவு பண்ற மாதிரி இப்படி சீன் கிரியேட் பண்ணி... இதெல்லாம் சரியா வருமா தமிழ்???" மாறன் சந்தேகமாக கேட்க, "நிச்சசயமா சரியா வரும். இது வரைக்கும் எல்லாம் அஸ் பெர் தி பிளான் போயிட்டு இருக்கு. நீ என்கூட இருக்கற வரைக்கும் அவன் என்கிட்டே வந்து பேசமாட்டான். ஆனா அவன் கண்ணு முன்னாடி இதெல்லாம் பண்ணனும். அவனுக்கு ஹர்ட்  ஆகும் பட் இது தான் பெஸ்ட்... சோ நீ பேசாம நான் சொல்றதை செய்..." என்றவள் அவனையும் இழுத்து கொண்டு நடந்தாள்.

அடுத்த நாள் அவள் எதிர்பார்த்தது போல அவள் தனிமையில் இருக்கையில் அவளை நோக்கி வந்தான் முரளி.

"என்ன தமிழ், ஒரே நாள்ல ரிப்லை தர சொன்னேன். ஆனா இப்படி ஓடி ஒளியற??" என்றபடி அவளருகே அமர்ந்தவனை பார்த்த தமிழ்செல்வி "ஓடி ஒளியல. ஆனா எனக்கு உங்களை பத்தி யோசிக்க டைம் கிடைக்கலை. என் பதிலை சொல்றதுக்கு முன்னாடி எனக்கும் உங்களை பத்தி ஏதாவது தெரிஞ்சிருக்கணும்ல" என்றவள் அவன் முகத்தை பார்க்க, "என்ன தெரிஞ்சுக்கணும்? என்னை கேட்டா நானே சொல்லிருப்பனே" என்றான் ஆர்வமாக.

அவனின் ஆர்வத்தை பார்க்கையில் அவளுக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது. மனதை கல்லாக்கியவள் "உங்க பேமிலி பேக் கிரௌண்ட் என்ன?" எனவும் "என் பேமிலி மிடில் கிளாஸ் பேமிலி தான். நான் டாக்டர் ஆகணும்னு எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, என் பேமிலியுடைய நிலைமை அதுக்கு அப்பறம் மாறிடும். எனக்கு ரெண்டு சிஸ்டேர்ஸ் இருக்காங்க... அப்பா ரிட்டையர்டு டீச்சர். அம்மா ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருக்காங்க" எனவும் "ஓஹ் ...." அவள் குரல் ஏமாற்றமாக ஒலித்தது. அதை உணர்ந்த முரளி "நான் டாக்டர் ஆனா எங்க பேமிலி நல்ல நிலைமைக்கு வரும்" எனவும் அவனிடம்

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.