(Reading time: 16 - 31 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தமிழ்மாறனுக்குமான அந்த புரிதல் ஒருவகையில் அவனுக்கு பொறாமையை தூண்டியது என்று கூட சொல்லலாம். அடுத்தப்பக்கத்தை திருப்பினான்.

அந்த கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. அவள் அந்தத் கல்லூரி நிறுவனரின் மகள் என அவளாக யாரிடமும் சொல்லவில்லை. மற்றவர்களை போலவே அவளுடைய கல்லூரி வாழ்க்கையும் இயலபாக சென்று கொண்டிருந்தது.

அந்த கல்லூரியின் மரத்தினடியே அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தனர் தமிழ்செல்வியும் தமிழ்மாறனும்.

"மாறா இந்த வாரம் நீ ஊருக்கு போகும்போது நான் வாங்கி வெச்சுருக்க கிப்ட்  எல்லாம் எடுத்துட்டு போக மறந்துடாத...ஓகேவா??" என்ற தமிழ்செல்வி "ம்ம்ம்ச்ச் எனக்கு தான் போரடிக்கும்..." என்று சினுங்க, "ரெண்டு நாள் தான தமிழ். அப்பாவுடைய நினைவு நாள். அம்மாக்கு வேற ஸ்கூலுக்கு ட்ரான்ஸபெர் பண்ணிட்டதால புது வீடு பாக்கணும். பாவம் அம்மாவால தனியா தங்கச்சிகளை வெச்சுட்டு எல்லாமே பண்ண முடியாது" என்றவனின் கையை பற்றிய தமிழ், "மாறா ஏதாவது ஹெல்ப் வேணும்னா கண்டிப்பா சொல்லு...எப்படி கேக்கறது யோசிக்காத ப்ளீஸ்..." எனவும் "நிச்சயம் தமிழ் உன் கிட்ட கேக்காம யாருகிட்ட கேக்க போறேன்" என்றான் மாறன்.

மாறன் இல்லாததால் அவர்கள் வழக்கமாக அமரும் இடத்தில் தனியாக அமர்ந்திருந்தாள் தமிழ்செல்வி. புத்தகத்தை புரட்டியபடி இருந்தவள் மேல் நிழல் விழாவும் நிமிர்ந்து பார்த்தாள். ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். அவன் யாரென புரியாமல் இவள் பார்க்க, "ஹாய் தமிழ், ஐ யாம் முரளி. நான் இங்க உக்காரலாமா??" என்றவன் அவள் சம்மதம் சொல்லும் முன் அவள் அருகே அமர்ந்தான்.

"நீங்க???" அவனை பார்த்து தமிழ்செல்வி கேட்கவும் "ஐ யாம் முரளி பிரம் செக்கண்ட்  இயர்" என்றவனை பார்த்தவள் "ஓ..." என்பதற்கு மேல் அவளுக்கு அவனுடன் பேச தோன்றவில்லை. அவள் அமைதியாக புத்தகத்தில் பார்வையை பதிக்க  "யூ  ஆர் வெரி  பியூட்டிபுல்" என்றவனின் புறம் பார்வையை திருப்பினாள்.

அவன் அவளையே பார்த்தபடி அமர்ந்திருக்க "தேங்க்ஸ்" என்றவள் கவனம் மீண்டும் புத்தகத்தின் புறம் திரும்ப "ஐ லவ் யூ " என்ற அவனின் அடுத்த வார்த்தைகளில் அதிர்ந்து போனவள் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். 

"நீ இந்த காலேஜ் வந்ததுல இருந்து நான் உன் பின்னாடியே தான் இருக்கேன். ஆனா நீ என்னை திரும்பி பார்த்ததே இல்லை. என்னைனு இல்லை யாரையுமே பார்த்தது இல்லை. எப்பவும் உன்கூட ஒருத்தன் இருப்பானே...அவன் பேர் கூட....ஹான் தமிழ்மாறன்.அவன் கூட தான் இருப்ப" அவன் பேசிக்கொண்டே செல்ல, சுதாரித்து கொண்டிருந்த தமிழ்செல்வி, "ஆமாம்

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.