(Reading time: 16 - 31 minutes)
Priyamaanavale
Priyamaanavale

உன்கிட்ட இல்ல" என்று ஆச்சர்யமாக பார்த்தவனை பார்த்து சிரித்தாள் தமிழ்செல்வி.

"மாறா, என் அம்மா கேன்சர் வந்து கஷ்டப்பட்டப்போ என்னால வேடிக்கை தான் பாக்க முடிஞ்சுது. நான் ஒரு டாக்டரா இருந்திருந்தா எங்க அம்மாவை நல்லபடியா பார்த்துருப்பானோன்னு இன்னைக்கு வரைக்கும் என் மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டு தான் இருக்கு. அப்பா பிசினஸ் பார்த்துக்க நந்து இருக்கான். அதனால நான் டாக்டர் ஆக போறேன்" சீரியஸ் மோடில் ஆரம்பித்து எப்போதும் போல இலகுவாக பேச்சை முடித்தவளை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை தமிழ்மாறனால்.

முதலில் அவளை பார்த்தபோது அவளது அழகும் அவளின் நளினமும் அந்த பதின்பருவத்தில் மனதில் ஒரு இனம் புரியா உணர்வை தூண்டியது தான். ஆனால் அவளுடன் பழக பழக அந்த எண்ணங்கள் எல்லாம் மறைந்து அவளின் நட்பு பரந்து விரிந்து வளர்ந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். ஒரு வருடம் மும்பு அவனின் தந்தை மறைந்ததும் தடுமாறி போனவனை தேற்றி இன்று அவள் படிக்கும் கல்லூரியிலேயே அவளின் தந்தையிடம் பேசி இடம் வாங்கி கொடுத்திருக்கிறாள். நிச்சயம் இவளை இந்த வாழ்க்கையில் சந்திக்க போன ஜென்மத்தில் ஏதோ பெரும் பேறு செய்திருக்க வேண்டும் என்று எண்ணினான் மாறன்.

அந்த வளாகத்தில் பிஎஸ்ஆர் குழுமத்தின் மருத்துவ கல்லூரி பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மூன்றும் இருந்தது. பேருந்தில் இருந்து இறங்கிய தமிழ்செல்வி, "மாறா லன்ச் டைம்ல கரெக்ட்டா கேன்டீன் வந்துரு. ஆல் தி பெஸ்ட்" என்று அவனிடம் விடை பெற்று அவள் வகுப்பறையை நோக்கி சென்றாள்.

அந்த கல்லூரி வளாகத்தில் இருந்து மிக பெரிய கேன்டீனில் தமிழ்செல்வியை தேடியபடி நுழைந்த தமிழ்மாறனின் பார்வையில் சுற்றி நான்கைந்து மாணவர்கள் சூழ அமர்ந்திருந்த தமிழ்செல்வி பட்டாள். வேகமாக அவளை நோக்கி சென்றவன் அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"ஹேய் யாரு நீ...? நீபாட்டுக்கு வந்து உட்காரர??" அங்கிருந்த ஒருவன் கேட்கவும், "சாரி நான் உங்களை கவனிக்கலை. நீங்க எல்லாம் யாரு?" அப்போது தான் அவர்களை கவனித்ததை போல பேசினான் தமிழ்மாறன்.

"நாங்க எல்லாம் தேர்ட் இயர் சீனியர்ஸ், நீயும் பிரெஷ்ஷர் தான... என்ன இந்த பொண்ணோட பாய் பிரெண்டா நீ?" இன்னொருவன் அவனின் தோளில் கையை வைத்து கேட்க, "சே சே இல்லைங்கண்ணா நான் பிரென்ட்...அவளோட பிரென்ட்...அவ்ளோ தான்" என்றபடி அவனின் தோளில் இருந்த கைகளை நகர்த்தினான்.

"ஹ்ம்ம் அப்போ தப்பிச்ச... அப்போ நாங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும்மா...உனக்கு

22 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.