(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

ஆரம்பித்து இருந்தாள் தமிழ்செல்வி.

"ஸ்டுடென்ட்ஸ் யு கைஸ் ஆர் ரியலி லக்கி... இந்த வருஷம் உங்களுக்கு அனாட்டமி எடுக்க யூஎஸ்ல படிச்சிட்டு வந்த டாக்டர் விக்னேஷ் அக்சப்ட் பண்ணிருக்காரு. அது மட்டும் இல்லாம அவர் நம்ம காலேஜ் பௌன்டேர் உடைய க்ளோஸ் ரிலேட்டிவ்...லெட்ஸ் வெல்கம் டாக்டர் விக்னேஷ்" எனவும் அங்கிருந்த மாணவர்கள் எல்லாம் வரவேற்கும் விதமாக கையை தட்டினர் தமிழ்செல்வியை தவிர.

அந்த வரவேற்பை புன்னகையுடன் ஏற்றவனின் பார்வை தமிழ்செல்வியின் மீது நின்றது "பார்த்தியா உன்னை எப்படி வந்து பாக்கறேன்னு??? என்னய்யா இந்த காலேஜ்க்கு வர கூடாதுனு சொன்ன???" அவன் கண்களால் கேட்பது அவளுக்கு புரிந்தது.

"என்ன தமிழ் என்னாச்சு? என்ன ஏதோ மூட் அவுட்டா இருக்க?" தன்னுடைய கையில் இருந்த அந்த குளிர்பானத்தை அவளிடம் நீட்டியபடி கேட்டான் மாறன்.

"ம்ம்ச்ச் இந்த கொஞ்ச நாளாவே எல்லாமே ஏதோ தப்பாவே நடக்கற மாதிரி இருக்கு..."எப்போதும் கலகலப்பாக இருப்பவள் இப்போது இப்படி பேசவும் அவளையே யோசனையுடன் பார்த்த மாறன், "என்னாச்சு தமிழ்?? ஏதாவது ப்ரோப்ளேமா??" என்றான் அவளின் கையை பற்றி இதமாக நீவி விட்டபடி.

"நான் சொன்னேன்ல அந்த விக்கி நம்ம காலேஜ்லயே அனாட்டமி ப்ரொபசரா ஜாயின் பண்ணிருக்காண்ணு...இப்போ  நந்துவும் இதே மெடிக்கல் காலேஜ்ல ஜாயின் பண்ணிருக்கான். அவங்க ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்தா எப்பவும் ஏதாவது பிரச்சனை வரும். அதான் பயமா இருக்கு" தமிழ்செல்வியின் முகத்தில் பயம் தெரிந்தது.;

 "அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னமோ பண்றாங்க...அதை பத்தி நீ ஏன் கவலை படர??? " மாறன் கேட்க, "தெரியல மாறா. என்னவோ மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு. சித்தி வேற வீட்ல விக்னேஷுக்கு எனக்கும் என்கேஜ்மெண்ட் பண்ண சொல்லி அப்பாகிட்ட சொல்லிட்டே இருக்காங்க. இப்போ நிச்சயம் பண்ணிட்டு நான் படிச்சு முடிச்சதும் கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு சொல்றாங்க. அப்பா என்கிட்டே கேக்காம எதுவும் செய்ய மாட்டார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் எறும்பு ஊற கல்லும் தேயும்னு  சொல்லுவாங்களே.அதான் அப்பாவும் ஒன் பெர்சென்ட் சான்ஸா சித்தி சொல்றதுக்கு ஓகே சொல்லிட்டா? அதான் என்ன பண்றதுனு தெரியல" கிட்டத்தட்ட அழுபவளை போல தமிழ்செல்வி சொல்ல, "சித்தி புத்திய காட்டிடறாங்க" மாறன் பல்லை கடிக்க "அப்படி எல்லாம் சொல்லாத மாறா" என்றவளை கண்டு தலையில் அடித்து கொண்டான்.

"புத்தகத்தை நல்லா படிச்சா மட்டும் போதாது கொஞ்சம் உலக வாழ்க்கையையும் படிக்கணும் தமிழ். சரி வா இப்போ எதுவும் யோசிக்காத " என அவளின் கையை பற்றி மாறன் செல்ல,

20 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.