(Reading time: 9 - 18 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வந்தேன் என்றவளின் கண்கள் கணினியின் திரையில் நின்றது... 

என்ன பண்ணிட்டு இருக்க ராகவ்.

ஏதோ பெரிய ப்ராஜெக்ட் ப்ரோக்ராமிங் போல என்று சொல்லி அந்த கோடிங்கை படிக்க ஆரம்பித்தாள் புஷ்பா.

ஆமாமா... ப்ரோக்ராமிங் பண்ணிக்கிட்டு இருக்கேன். இந்த வெப்சைட் எப்படி இருக்குன்னு பாருங்க என்று சொன்னவன் ஒரு வெப்சைட்டின் மாடல் தோற்றத்தை எடுத்து காண்பித்தான்.

 இதை உருவாக்குவதற்காக தான் கோடிங் எழுதிக் கொண்டிருக்கிறேன். முதலில் இந்த வலைதளத்தை உருவாக்கி இதை பாப்புலர் ஆக வேண்டும். இது நம்முடைய பிசினஸ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும் என்று திரையில் அவன் எழுதி இருக்கிற கோடிங் மற்றும் மாடலை காட்டினான்.  புஷ்பாவின் கண்கள் மலர்ந்தது. உன்னை என்ன சொல்லி பாராட்ட என்று எனக்கு தெரியல ராகவ்... உன்னை என் பையன் என்று சொல்லி கொள்வதில் நான் ரொம்ப பெருமை படுகிறேன் என்று அவன் தோளை தட்டி விட்டு அங்கிருந்து கடந்து சென்றாள்.

 உன்னை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது ராகவ். எங்கள் திட்டத்தை பற்றி நீ தெரிந்து கொள்ளக் கூடாது அல்லவா.. எங்கள் கையில் இருக்கும் ஒரே சாவி நீதான். கீ கொடுத்தால் ஆடும் பொம்மை போல நீ இருந்தால் போதும். சாவியாகிய உன்னை வைத்து அகிலத்தையும் நாங்கள் ஆட்டிப்படைக்க போகிறோம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் புஷ்பா.

ஆனால் அவர்களின் வஞ்சகத் திட்டம் எதையும் அறியாத ராகவ்  அம்மான்னா அம்மாதான்... அம்மாவோட அன்பு எப்பவுமே ஸ்பெஷல்தான் என்று சொன்னவன் லவ் யூ மா என்றபடியே மீண்டுமாக கணினியின் திரையில் தன் விழிகளை பதித்துக் கொண்டான்.

அவன் மனமும் இன்னும் பத்து தினங்களில் அவன் முடிக்கப் போகும் அந்த ப்ராஜெக்ட்ல் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

 இன்னும் 10 நாட்கள்... பத்து நாட்கள் கடந்து போகும்போது என் வாழ்வின் மொத்த நாட்களும் அழகாகி விடும் என்று தன் வாழ்வின் அழகிய நாட்களுக்காக காத்திருக்கத் தொடங்கினான் அவன்.

 எதிர்பாராத விதமாக அவனது மொபைல் அழைத்தது. மொபைல் அழைப்பின் ரிங்டோன் கொண்டே அழைப்பது குயிலி தான் என்று உணர்ந்து கொண்டான்.

 ஏனோ இதற்கு முன்னால் அந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவனுக்கு ஏதோ ஒரு புதுவித உணர்வு ஏற்படும். ஆனால் இந்த முறை அவனுக்கு வெறுப்பாக இருந்தது. அவனது முகத்தில் தோன்றிய அந்த சுருக்கங்களே அவனது வெறுப்பினையும் உணர்த்தியது.

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.