(Reading time: 10 - 20 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

இருப்பார். நான் இறந்த பிறகும் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது. அதனால் நானே இப்போதே எனக்கு கல்லறை கட்டி வைத்து விடுகிறேன் என்று சொல்லி பொருட்களை வரவழைத்து அவர் கல்லறையை கட்டி அவரை உள்ளே வைப்பதற்கு ஏற்ப சிறு வழியை மட்டுமே வைத்திருந்தார். அது அவளுக்கு ஞாபகம் வந்தது.

 அப்படி என்றால் இந்த கல்லறையை கட்டும்போதே தாத்தா இந்தப் பெயரை எழுதி இருக்கிறார். அது போக இந்த கல்லறை கட்ட தாத்தா எந்த ஒரு நபரையும் அழைக்கவில்லை. அவர் ஒருவரே தனி ஆளாக இருந்து இந்த கல்லறையை வடிவமைத்தார்‌. அப்படி என்றால் இந்த கல்லறையில் ஏதாவது ஒரு ரகசியம் புதைந்து இருக்குமா என்று யோசனையுடன் அந்த கல்லறையை தடவித் தடவி பார்த்தாள்.

அந்தப் பூங்குழலி என்ற எழுத்தை தடவிப் பார்க்கும் பொழுது அந்த "ங்" என்ற எழுத்தில் ஏதோ ஒரு தடை இருப்பது அவளது கைகளில் பட்டது. அதை கூர்ந்து பார்த்தால் அந்த "ங்" என்ற எழுத்தில் உள்ள துளையை கண்டு கொண்டாள். ஒற்றை என்ற வார்த்தை ஒற்றெழுத்தை குறிக்கிறதோ என்று யோசித்தாள்.

 அவளுக்கு திடீரென்று தான் முன்னரே கண்டு எடுத்த அந்த சாவி நினைவுக்கு வர தன் ஹேன்ட் பேக்கில் இருந்த அந்த சாவியை வெளியே எடுத்து அந்த சிறிய துவாரத்தில் செலுத்தினாள்.

 அவள் நினைத்தது போலவே அவள் அந்த சாவியை அந்த எழுத்தில் இருந்த துவாரத்தில் விட்டதுமே அதிலிருந்து சிறிய மரப் பலகை போன்ற ஒரு பெட்டி திறந்துகொண்டது. அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்படி என்றால் என்னிடம் எதையோ சொல்ல விரும்புகிறார். அதைத்தான் இந்தப் பெட்டியில் வைத்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவள் வேகமாக அந்தப் பெட்டியை பார்க்க அதனுள் பல பைல்களும் ஒரு பையும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த பெட்டியை பூட்டி விட்டு ஆசிர்வாதம் தாத்தாவை நோக்கி வந்தாள் .

அவளது கையில் இருந்த சற்று கனமான அதில் இருந்ததிலேயே பெரிய அளவிலான பைலை முதலாவது திறந்தாள். அதன் முதல் பக்கத்திலேயே குயிலி நீ இங்கிருந்து உடனே சென்று விடு. உனக்கு ஆபத்து இருக்கிறது என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது.

அவள் ஏனென்று யோசிக்கும் முன்பே வெளியே ஆட்கள் நடந்து வரும் சத்தம் கேட்டது. 

 குயிலி ஆசீர்வாதம் தாத்தாவை கூட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள். வீட்டின் பின் பகுதி வழியாக சென்று அடர்ந்த காட்டை அடைந்து விட்டாள். நேரம் இரவு ஆகி விட்டாலும் சிறு வயதில் சுற்றி திரிந்த இடம் என்பதால் தைரியமாக முன்னேறி ஆசிர்வாதம் தாத்தா உடன் அங்கிருந்த ஒரு குகையை அடைந்தாள்.

தொடரும்

Go to Unakkaagave uyir vazhgiren story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

18 comments

  • Ouch 😱😱😱 ena karpanai ena karpanai 👌 thatha graveyard la clue va vachi irukaru yammadiyo :eek: idhai ellam.pana ivarukku neram irundhadha...abathunu therinjum ivalo risky plan ah facepalm good they escaped 👍 raghav suzhnilai kaidhiyaga irukaro?? Is he pretending for some reason??? Hope Kuyili ellathayum kadandhu varuvanganu??? Semma Interesting aga konduporinga jeba ma'am 👏👏👏👏👏👏 how is Ramu connected to their family?? <br />look forward to read the next move.<br />Thank you.
  • இவ்வளவு பெரிய பாராட்டு கிடைத்ததே மிக பெரிய கிஃப்ட் .. மிக நன்றி.. தங்களின் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி uncle
  • Sema viruviru epi mam :clap: oru thriller movie paakra pola feel :hatsoff: eagerly waiting for the next update mam.
  • அன்புள்ள ஜெபா! கதையின் போக்கு, கற்பனையின் உச்சம். சிக்கல் நிறைந்த மர்மம் மிகுந்த சரித்திரக் கதையா, துப்பறியும் நாவலா என நினைக்கத் தோன்றுகிறது. பிரமாதம்! கல்கியின் நினைவு வருகிறது! சில்சீக்கு வெளியேயும் தங்கள் படைப்புகள்<br />வரவேற்கப்படும் என்பது உறுதி!

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.