(Reading time: 20 - 40 minutes)
Priyamaanavale
Priyamaanavale

யோசிக்க, அறையின் கதவு தட்டும் சத்தம் கேட்டது. "ஒரு நிமிஷம்" என்றவள் பால்கனியில் இருந்து நகர்ந்து அரை கதவை நோக்கி சென்றாள்.

வழியே நின்றிருந்த நந்துவை பார்த்தவளுக்கு ஆச்சர்யம் தோன்றினாலும் அதை வெளிக்காட்டாமல் அவனை உள்ளே அழைத்தாள்.

"அக்கா, மாமா சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டனா?" அவன் அக்கா என்று அழைத்ததை நம்ப முடியாமல் பார்த்தாள் தமிழ்செல்வி.

"இல்லை நந்தா சும்மா தான் பேசிட்டு இருந்தோம்" ராம் சொல்ல, "நான் வெளிய போறேன். மாமா வந்ததுல இருந்து வீட்லயே இருக்காரு. அதான் கூட கூட்டிட்டு போலாமேன்னு நெனைச்சேன்" நந்து சொல்லவும், தமிழ்செல்வி ராமை பார்க்க, "ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. டிரஸ் செஞ் பண்ணிட்டு வரேன்" என்றவன் இரண்டு நிமிடங்களில் கிளம்பி வர இருவரும் புறப்பட்டு சென்றனர். 

காரில் அமர்ந்திருந்த இருவருமே அவரவர் யோசனையில் மூழ்கி இருந்தனர். கார் ஒரு பெரிய வணிக வளாகத்தின் முன் வந்து நின்றது. பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

"இது நம்ம ஷாப்பிங் காம்ப்லெஸ் தான் மாமா. தமிழ் முதல் முதல்ல இங்க தான் பிசினஸ் கத்துக்கிட்டா. இங்க எல்லாமே அவளுக்கு அத்துப்படி. அப்பா ரொம்ப பெருமையா சொல்வார் பதினேழு வயசுலயே என் பொண்ணு பிசினஸ்ல புலினு. ஆனா அவ தான் பிசினஸ் வேண்டாம் அப்படினு சொல்லிட்டு மெடிக்கல் சயின்ஸ் படிக்க போயிட்டா. அதுல அப்பாக்கு ரொம்ப வருத்தம்" நந்து பேசியபடியே அந்த ஷாப்பிங் காம்ப்ளலெக்ஸில் இருந்த காபி ஷாப்பில் வந்து அமர்ந்தான். அவனுக்கு எதிரே அவன் சொல்வதை எல்லாம் கேட்டபடி அமர்ந்தான் ராம்.

"நான் மெச்சுரிட்டி இல்லாம பண்ணுன தப்பு. ஒரு உயிர் போனது மட்டும் இல்ல. தமிழ் இந்த குடும்பத்தையே ஒதுக்கி வெச்சுட்டா. அவ அபப்டி போனதுக்கு அப்பறம் அப்பா என்னையும் அம்மாவையும் அப்படியே ஒதுக்கிட்டார். இந்த குற்ற உணர்ச்சி எல்லாம் எப்படி சரி பண்றதுனு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா இப்போ தமிழ் எல்லா ப்ரோபெர்ட்டிசையும் எனக்கும் அம்மைக்கும் வர மாதிரி மாத்தி எழுத சொல்லி என் குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகம் ஆக்கிட்டா, நான் பண்ணுன பாவத்துக்கான மன்னிப்பு இந்த ஜென்மத்துல கிடையாதுன்னு எனக்கு புரிஞ்சுடுச்சு" அவன் சொல்லும் போதே அவன் கண்கள் கலங்கியது.  கண்களை மூடி நிதானப்படுத்தி கொண்டவன் "சாரி மாமா உங்களை கூட்டிட்டு வந்துட்டு இதெல்லாம் புலம்பிட்டு இருக்கேன். யார்கிட்டயாவது சொல்லணும்னு தோணுச்சு அம்மா கிட்ட எதுவும் சொல்ல முடியல. அம்மா ஏற்கனவே குற்ற உணர்ச்சியும் அப்பா இறந்த

21 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.