Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Kandathoru katchi kanava nanava endrariyen
Pin It

தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகா

கோவை

உத்ராவை சென்னையில் விட்டுவிட்டு ஈஸ்வரியும் அப்போதுதான் அந்த வீட்டிற்குள் பிரவேசித்திருக்க அவளைக் கண்டதும் அவளது தந்தை அறிவுடைநம்பி மற்றும் துரைசிங்கம் இருவரும் கோபத்தில் பொங்க வசியோ அவர்கள் இருவரையும் பாட்டியின் பெயரை சொல்லியும் கல்யாணத்தை பற்றி சொல்லியும் ஒரு வழியாக அவர்களை சரிகட்டி ஈஸ்வரியை பத்திரமாக ஒரு அறைக்குள் தங்க வைத்துவிட்டு உறங்க சென்றான்.

விடிந்தது

காலையில் 5 மணிக்கே பாட்டி மானஸாவை எழுப்பினார்

மானஸா எழு நேரமாகுது

என்ன பாட்டி எதுக்கு எழுப்பறீங்கஎன தூக்கத்தில் கண் திறவாமலே பேசினாள்

கல்யாணத்துக்கு நேரமாகுது எழு

கல்யாணமா அதான் நிறுத்த வந்தீங்களே இன்னுமா நிறுத்தலஎன முனுமுனுக்க

நான் சொன்னது உன்னோட கல்யாணத்தைஎன பாட்டி சொல்லவும் அதிர்ச்சியில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் மானஸா

என்னது என் கல்யாணமா பாட்டி என்ன சொல்றீங்கஎன கத்த

நேத்து உன் முன்னாடிதானே சொல்லிட்டு போனேன் அப்புறம் என்ன

பாட்டி இது அநியாயம் நான் ஒத்துக்க மாட்டேன்

உன் அனுமதி எனக்கு தேவையில்லை இது உன் மானப்பிரச்சனை இனி யார் உன்னை கல்யாணம் பண்ணிக்குவாங்க வா வா எழு, கீழே வசீகரன் ரெடியாயிட்டான் 7 மணிக்கு முகூர்த்தம் எழுஎன கூறவும் அவள் ரூமிலிருந்து வெளியே சென்று மேலிருந்தே கிழே பார்த்தாள்.

அந்த வீடே முற்றிலுமாக மாறியிருந்தது இரண்டு கல்யாணங்கள் நடப்பதற்கான அத்தனை ஏற்பாடுகளும் நடந்திருந்தது. மணமேடையும் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்றில் மாதவனும் ஒன்றில் வசீயும் மகிழ்ச்சியாக அமர்ந்து புரோகிதர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தனர்.

அவள் உடனே உள்ளே வந்து

பாட்டி என்ன இது என்ன நடக்குது இங்கஎன அலற அதற்கு பாட்டியோ

போதும் நான் உன் அம்மாகிட்ட பேசிட்டேன் அவங்களுக்கும் இதுல சம்மதம் அவங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க கிளம்பு ரெடியாகு

முடியாது பாட்டி நான் ஒத்துக்க மாட்டேன்.”

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Aanantham enakkethu anbe neeyillaathuAanantham enakkethu anbe neeyillaathu
  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Naan vazhum vazhve unakkagathaaneNaan vazhum vazhve unakkagathaane
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 11 - சசிரேகாmadhumathi9 2020-10-22 18:35
:clap: cute epi sasi (y) eagerly waiting 4 next epi :-) :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top