(Reading time: 13 - 25 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

 அதெல்லாம் ஒன்றும் இல்லை நீ செய்ததும் ஒருவேளை சரியாக இருக்கலாம்.... ஏனென்றால் ராமுவை காணவில்லை ஒருவேளை குயிலிக்கு  தெரியலாம் என்று அவளையும் தேடினோம். ஆனால் அவளும் சிட்டியில் இல்லை. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எது நடந்தாலும் நல்லதாகவே நடக்கும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டியதுதான்.... என்று கூறிய பிரதாபன் அந்த குயிலி உன்னை தொடர்பு கொண்டாளா என்றார் உண்மையை அறியும் ஆர்வத்துடன்.

 ஒரு நொடி பிரதாபன் முகத்தை கூர்ந்து நோக்கிய அவன் இல்லை என்று தலையசைத்தான். சற்று அமைதி காத்தவன் முதலில் அழைத்து பார்த்தாள். நான் எடுக்கவில்லை என்று தெரிந்ததும் அவளும் அழைப்பதை நிறுத்திவிட்டாள் என்று சொல்லியவன் தன் வேலையில் கவனத்தைச் செலுத்தினான்.

 ஏதோ ஒரு மனது அமைதி ஆழ்மனதில் பரவ அங்கிருந்து வெளியேறினார் பிரதாபன்.

குயிலி...

தாத்தா உங்களுக்கு இந்தக் குறிப்பு வைத்து ஏதாவது ஓர் ஊர் தெரிகிறதா என்றாள் குயிலி.

 எனக்கு தெரியவில்லை அம்மா... அந்த அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் உன்னிடம் கேட்கலாமா என்றார் ஆசீர்வாதம்.

 கேளுங்க தாத்தா... என்னிடம் கேட்பதற்கு உங்களுக்கு என்ன தயக்கம். கேளுங்கள் என்றாள் குயிலி.

 அம்மாடி குயிலி... இந்த ஒரு குறிப்பை எழுதி வைத்திருப்பது உன் அப்பா அம்மா என்றுதானே சொல்லுகிறாய்...

 ஆமா தாத்தா...

 அப்படி என்றால் நீ தமிழ்நாட்டில்தான் வளருவாய் என்று அவர்களுக்கு எப்படி தெரியும். நான் தான் உன்னை கடலில் இருந்து காப்பாற்றி கூட்டிக் கொண்டு வந்தேன். நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவன் ஆக இருந்தால் உன்னை அங்குதானே அழைத்து சென்று இருப்பேன். அப்படி இருக்கும் பொழுது இது தமிழ்நாட்டில் உள்ள ஒரு இடமாக இருக்க வாய்ப்பு இல்லை அல்லவா... நீ எந்த ஊரில் பிறந்து வளர்ந்தாயோ அந்த ஊரை சேர்ந்ததாக இருக்கலாம் அல்லவா... நீ நன்றாக யோசித்துப் பார். ஒருவேளை உனக்கு நீ பிறந்து வளர்ந்த ஊர் ஞாபகம் வரலாம். அந்த ஊரில் உள்ள ஒரு பகுதியாக இந்த குறிப்பு இருக்கலாம் இல்லையா.. நீ பிறந்த ஊராகவே கூட இருக்கலாம் அல்லவா என்றார் ஆசிர்வாதம் தாத்தா.

 தாத்தா.... புத்திசாலி இல்லை என்று சொல்லிவிட்டு மகா புத்திசாலி தனமாக கேள்வி கேட்கிறீர்களே என்றவள் அவளது கணிப்பை கூறத் தொடங்கினாள். தாத்தா சிறுவயதில் நான்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.