(Reading time: 13 - 25 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

காட்டியதால் புத்த இடங்கள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கிறது என்று அலசி ஆராய்ந்து பார்த்தாள். ஆனால் அப்படி குறிப்பிட்ட எந்த இடங்களிலுமே அவளுக்கான குறிப்புகள் இருப்பது போல அவளுக்கு தெரியவில்லை. மீண்டும் மீண்டுமாக யோசித்தவள் சரி ஒவ்வொரு மாவட்டங்களா பார்க்கலாம்... அதிலிருந்து ஏதாவது குறிப்பு கிடைக்கலாம் என்று யோசித்தவள் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் என டைப் செய்து தேட ஆரம்பித்தாள். தமிழ்நாட்டின் மொத்த மாவட்டங்களையும் ஒவ்வொன்றாக மெதுவாக கவனித்து வாசிக்க ஆரம்பித்தாள். மொத்த மாவட்டங்களையும் ஒன்றுக்கு இரண்டு முறை வாசித்து முடித்தபின் மீண்டுமாக ஒவ்வொரு மாவட்டங்களின் பெயர்களையும் ஒவ்வொன்றாக வாசித்தாள்.

தேனி என்ற பெயரை வாசிக்கும் போது அவளுக்கு ஏதோ உணர்வு தோன்ற அவள் அந்த வரைபட குறிப்பையும் எடுத்து பார்த்தாள். அதில் தேனீ படம் இருக்க ஒருவேளை அந்த படம் குறிப்பது தேறீ மாவட்டத்தை ஆக இருக்குமோ என்று யோசித்தவள் மீண்டும் அந்த குறிப்பை கூர்மையாக கவனித்தாள். தேனி படத்தை அடுத்ததாக ஒரு குளம் வரையப்பட்டிருந்தது. அந்த குளத்தின் நடுவில் பிக் என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது. யோசித்தவள் தேனி பக்கத்தில் தேனி என்று எழுதியவள் குளத்தின் பக்கத்தில் பெரிய குளம் என்று எழுதி கூகுளில் மீண்டுமாக பெரியகுளம் என டைப் செய்தால் அவளுக்கு இப்பொழுது ஓரளவு எல்லாமே புரிய ஆரம்பித்தது.

தேனீ தேனி மாவட்டத்தை குறிக்கிறது. பிக் குளம் அதாவது பெரியகுளம் என்பதை குறிக்கிறது. டீக்கடை என்பது டி என்ற இன்ஷியலையும் கள்ளிசெடி கள்ளி என்பதையும் நாயிற்கு பட்டி என்ற ஒரு பெயர் உண்டு என்பதையும் அறிந்தவள் டி.கள்ளிப்பட்டி என்று எழுதானாள்.

 மொத்தமாகப் சேர்த்து படித்தவள் கூகுளில்தேடி மொத்த விவரத்தையும் சேகரித்து கொண்டாள். மிகவும் மகிழ்ச்சியோடு தாத்தா நாம் செல்லவேண்டிய இடத்தை கண்டுபிடித்து விட்டேன் என்றவள் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஊராட்சி அருகிலுள்ள டீ கல்லுப்பட்டி என்ற ஊருக்கு தான் நாம் செல்ல வேண்டும். அங்கு ஏதோ ஒரு மலைப்பகுதி இருக்கிறது... அங்கு தான் இந்த புத்தர் சிலையை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லவும் ஆசீர்வாதம் தாத்தாவிற்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தேகமாகவும் இருந்தது. ஒருவேளை தவறாக இருந்தால் என்று யோசித்தார். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் சரிமா உடனே கிளம்பலாமா என்றார்.

தாத்தா நாம் இப்படியே வெளியே செல்ல முடியாது. நம்மை தேடிவரும் எதிரிகள் எப்படியும் இந்த கிராமத்தை சுற்றி ஆங்காங்கே நின்று கொண்டுதான் இருப்பார்கள். அதனால் நாம் இதற்கு ஏதாவது ஒரு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். அதனால் நீங்கள் சற்று நேரம்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.