Page 5 of 5
அதனால் சீக்கிரம் அவர்களை காப்பாற்ற வேண்டும். ராகவ்விற்கு இந்த உண்மையை சொல்லவேண்டும். முதலில் இங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க அடுத்த பேப்பரை எடுத்துப் பார்த்தாள். அது குறிப்பு தாள் என்பதை புரிந்து கொண்டவள் அதோடு இருந்த மேப்பை எடுத்து பார்த்தாள்.
அந்த மேப் குகையின் வரைபடம் என்பதை உணர்ந்தவள் தேவையான விபரங்களை எடுத்து கொண்டு எழுந்தாள். அந்த இடத்தில் இருந்து வெளியேறும் வழியும் கிடைத்தது. அந்த மேப்பின் உதவி கொண்டு எளிதாக அந்த குகையில் இருந்து வெளியே வந்து மலைக் கோயிலின் அடிப்பகுதியை அடைந்தாள் குயிலி.
தொடரும்