(Reading time: 9 - 18 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“ஓ...அனுப்பிய உங்களுக்கு ஒரு தேங்க்ஸ்!.. பாராட்டிய எம்.டி.க்கும் ஒரு தேங்க்ஸ்!...” என்றான் ரவீந்தர்.

“க்கும்...இப்ப பாராட்டுவே...அடுத்து நான் சொல்லப் போற விஷயத்தைக் கேட்டா...எனக்குக் குடுத்த தேங்க்ஸையும், எம்.டி.க்குக் குடுத்த தேங்க்ஸையும் உடனே வாபஸ் வாங்கிக்குவே” என்றார் மேனேஜர் தேவநாதன்.

அவர் ஏதோ பொடி வைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட ரவீந்தர், “ஆஹா...அப்படி என்ன சார் ரிப்ளை குடுத்திருக்கார் எம்.டி.?...அவனை வேலையிலிருந்து தூக்கிடுங்க”ன்னு போட்டுட்டாரா?...இல்லை ஆறு மாசத்துக்கு சஸ்பெண்ட் பண்ணிடுங்க!ன்னு போட்டிருக்காரா?” முகத்தைச் சுளித்துக் கொண்டே கேட்டான் ரவீந்தர்.

“ம்ஹும்...அப்ப்டியெல்லாம் போடலை!...நம்ம சேல்ஸ் எல்லா ஏரியாவிலும் நல்ல நிலைமைலதான் போயிட்டிருக்காம்...ஆனா....கோயமுத்தூர் மாவட்டத்திலேயே...பொள்ளாச்சி டிவிஷன்ல மட்டும் எப்பவும் நெகடிவ் ரிசல்ட்டே வருதாம்...அதனால.....”என்று சொல்லி விட்டு மேனேஜர் நிறுத்த,

“என்னைத் தூக்கி அங்க போடச் சொல்லிட்டார்”...அப்படித்தானே சார்?” ரவீந்தர் கேட்டான்.

தர்ம சங்கடமாய் நெளிந்த மேனேஜர், “ஆமாம்ப்பா....எனக்கு சொல்றதுக்கே கஷ்டமாயிருக்குப்பா” என்றார்.

“இதுல கஷ்டப்படறதுக்கு என்ன சார் இருக்கு?...மேனேஜ்மெண்ட் என்ன சொல்லுதோ அதை மறுக்காமல் ஏத்துக்கறதுதானே?..ஒரு நல்ல பணியாளோட டியூட்டி?” சாதாரணமாய்ச் சொன்னான் ரவீந்தர்.

“அப்ப...உன்னை பொள்ளாச்சிக்கு மாற்றியதில் உனக்கொன்றும் வருத்தம் இல்லையே?” மேனேஜர் சந்தேகமாய்க் கேட்க,

“சார்...வாழ்க்கை என்பது எப்பவும் ஒரே மாதிரி இருக்காது...இன்னிக்கு ஜாலியாயிருந்தா...நாளைக்கு கஷ்டமாயிருக்கும்!...ஜாலிக் காலத்துல அந்த ஜாலியை அனுபவிக்கணும்..கஷ்ட காலத்துல அந்தக் கஷ்டத்துடன் மோதிப் பார்க்கணும்!..அப்பத்தான் வாழ்க்கை எப்பவுமே சுகமாயிருக்கும்” வயதில் சிறியவனான அந்த இளைஞன் பேசிய வார்த்தைகளை வியப்புடன் பார்த்தார் மேனேஜர் தேவநாதன்.

“அப்ப...ஹெட் ஆபீஸுக்கு உன்னோட ஒப்புதலை அனுப்பிடலாமா?...எதுக்கும் ஒரு தடவைக்கு...நாலு தடவை யோசிச்சிட்டுச் சொல்லுப்பா!...நான் வேணா பெண்டிங் வைக்கறேன்!” என்று மேனேஜர் சொல்ல,

“சார் ஒரு தடவைக்கு நாலு தடவை இல்லை...எட்டு தடவையே யோசிச்சிட்டேன்!...நீங்க

4 comments

• Nice start Sir ! Hero introduction with his positive outlook in life super. Is Kavya the heroine ? What new is awaiting her in the manager’s room ? Will she also get transferred to the same place ? Waiting for further episodes..
• Kavi-i kuda manager water illadha forest kk matha poraro :Q: cool and entertaining kick of sir 👏👏👏👏👏

mr. Ravidhar periya gyaniyaga iruparu pole :D and his high spirit is :cool:

I liked the reference passage about marketing the shoes👌 look forward to see what happens next.
Best wishes for ur new series.👍
Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.