உடனே கொடுத்துடுவாங்க!"
" புரியலியே!"
" தலைவரே! முதல் பாயிண்ட் சட்டப்படி எங்களுக்கு ஆறு மாத நோட்டீஸ் தரணும், ஏன்னா முன்பணம் ஆறுமாத வாடகை வாங்கிண்டிருக்கா, ரெண்டாவது, நாங்க ஆறுமாதம் முடிந்தபிறகும் காலி பண்ணாம கோர்ட்டு கேஸ்னு போய் ஒரு வருஷம் இழுக்கடிக்கலாம். உங்கள் அனைவருக்குமே, ஒருகோடி நஷ்டமாயிடும். மூன்றாவது, ஓனர்கள் வாங்கப்போகிற ஊக்கத்தொகை கறுப்புப் பணம்னு நாங்க வருமானவரி இலாகாவுக்கு சொன்னால், நீங்க எல்லாரும் மாட்டுவீங்க ........"
" இது போதும்! நான் இதை அப்படியே மற்ற ஓனர்களிடம் சொல்கிறேன். அவங்க, பத்து லட்சத்தை குறைக்கச் சொல்வாங்க, அதுக்கு நீங்க சம்மதிக்கணும்......"
" தலைவரே! நல்லவேளை, நினைவுபடுத்தினீங்க! பத்து லட்சம்தான் நியாயம்! ஆனா நாங்க கேட்கிற தொகையை தர மனம் வராது, குறைக்கச் சொல்வது சுபாவம். ஒண்ணு செய்வோம், பத்து லட்சத்தை இருபது லட்சமா சொல்லுங்க குறைக்கச் சொல்லி பேரம் பேசறபோது, ஒரு லட்சம், ரெண்டு, மூணு லட்சம்னு படிப்படியா இறங்கிவராப் போல, நாங்க குறைத்து இறுதியா பத்து லட்சத்தில் முடிச்சிக்கிறோம். ரெண்டு தரப்புக்கும் சந்தோஷமாக இருக்கும்......"
" வக்கீல்சார்! என்னைவிட, நீங்க திறமையா பேசறீங்க, நான் அந்தக் கட்சியிலேயே இருந்தாலும், உங்க பேச்சில் குறுக்கிடாம, இருக்கேன், நீங்களும் மூணுபேர் கமிட்டி ஒண்ணு அமைத்து பேச்சு வார்த்தை நடத்துங்க! சரியா வேற ஏதாவது இருக்கா?"
" தலைவரே! நீங்க எங்களுடன் பேசினதை ரகசியமாகவே வச்சிப்போம்."
" ஓ.கே."
பத்து பேரும் சந்தோஷமாக 'தலைவர் வாழ்க' வாழ்த்து சொல்லிவிட்டு கலைந்தனர்.
தொடரும்
Next episode will be published on 1st Dec. This series is updated weekly on Tuesday mornings.