செலவுகளை சமாளிப்பர்.... உரிய வயதாகிவிட்டால் விளையாட்டு கோட்டாவில் அரசாங்கத்திலோ, இல்லை தனியாரிலோ கட்டாயமாக வேலை கிடைத்துவிடும்.... மாத சம்பளமும் வரும்... இங்கு மைத்திக்கு ஸ்பான்ஸர் யாரும் கிடைக்காததால் பணப் ப்ரச்சனை ஆரம்பித்தது...
ஆண்களும், பெண்களும் ஓரளவு சரிநிகர் சமானமாக இருக்கும் இந்த காலகட்டத்திலேயே சம்பளம் முதல், விளம்பரம் வரை பெண்கள் விளையாட்டுக்களில் பாரபட்சம் இருக்கிறது.... அப்படி இருக்கையில் எண்பதுகளின் காலகட்டத்தை பற்றி கேட்கவே வேண்டாம்.... பெண்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் என்பது அந்த குடும்ப வட்டத்தை விட்டு வெளியில் தெரியுமா என்பதே சந்தேகம்.... கபில்தேவையும், கவாஸ்கரையும் தெரிந்த எத்தனை பேருக்கு நீலிமாவையும், ஷுபாங்கியையும் தெரிந்திருக்கிறது.... இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப உதவியால் மித்தாலி ராஜ் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறோம்....
எனவே பாஸ்கர் எத்தனை முயன்றும் அவரால் மைத்திக்கு உதவ யாரையும் பிடிக்க முடியவில்லை... அவரால் முடிந்ததாக அகாடமியில் அவளுக்கு இலவச பயிற்சியளித்தார்....
அடுத்த இரண்டு வாரங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் செல்ல, ஒரு மாலை நேரத்தில் கண்ணன் மைத்தி குடும்பத்தாரை சந்திக்க வந்தார்... அனந்து மருந்தின் வீரியத்தால் தூங்கிக்கொண்டிருக்க மற்றவர்கள் முற்றத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்... காமாட்சி பாட்டி அனந்துவின் அருகில் அமர்ந்து நாராயணீயம் படித்துக்கொண்டிருந்தார்...
“இப்போ அனந்து சார் எப்படி இருக்காங்க மேடம்.... எதாச்சும் முன்னேற்றம் இருக்கா...”, உள் சென்று அனந்துவை பார்த்துவிட்டு வந்த கண்ணன் முற்றத்தில் அமர்ந்தபடியே அங்கிருந்த சியாமளாவிடம் கேட்டார்....
“வெளிக் காயங்கள் எல்லாம் ஓரளவு ஆறிடுச்சு சார்.... எலும்பு முறிவுதான் சரியாக எப்படியும் நாள் எடுக்கும்ன்னு சொல்றாங்க... பார்க்கணும்....”
“யார் கவனிச்சுக்கறாங்க... நர்ஸ் போட்டிருக்கீங்களா... சார் நடக்க ஆரம்பிக்கலை இல்லை...”
“இல்லை சார்... இன்னும் ரெண்டு மாசம் கண்டிப்பா நடக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க... மாமியார்தான் பார்த்துக்கறாங்க...”
“அப்பறம் மேடம் உங்ககிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசத்தான் வந்தேன்...”
“சொல்லுங்க சார்...”
“ரெண்டு நாள் முன்னாடி நம்ம மைத்தி அவளோட பிரைவேட் கோச்கிட்ட இனி ப்ராக்டிஸ்க்கு வரமாட்டேன்னு சொல்லிட்டா போல.... அவர் பாஸ்கர் சார்க்கு போன் பண்ணி என்னாச்சுன்னு கேட்டிருக்கார்... அப்பறம் பாஸ்கர்கிட்டயும் வேலை ஏதாவது கிடைக்குமான்னு கேட்டு இருக்கா... கோச்சிங் அசிஸ்டெண்ட் மாதிரி வேலை இருந்தாக்கூட போதும்ன்னு சொல்லி