"ஆனாலும் தமிழ் நீ ரொம்ப கிரேட்... எவ்ளோ கஷ்டமா இருந்தாலும் ஒரு அழகான ஸ்மைல்லோட அதை கடந்து போற. எனக்கும் உன்னை மாதிரி இருக்கணும்னு இருக்கு" எனவும் தமிழ் இப்போது நித்யாவை ஆச்சர்யமாக பார்த்தாள் .
"என்னடா எப்போ பாரு நம்மகிட்ட எரிச்சலா பேசறவ இப்போ இப்படி பேசறாளேன்னு பாக்கறியா? ம்ம்ச்ச்....உன்னை பத்தி புரிஞ்சுக்காம நான் அப்படி பேசிட்டேன்...அதெல்லாம் எதுவும் மனசுல வெச்சுக்காத" நித்யா பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல, "சே சே அதெல்லாம் எதுவும் நான் நினைக்கல" தமிழ் மனம் நிறைந்த புன்னகையுடன் சொல்ல, "சும்மா பொய் சொல்லாத தமிழ்" என நித்யா சினுங்க, "ஐயோ இல்லை நித்யா நெஜமாவே நான் அதெல்லாம் மனசுல வெச்சுக்கள" தமிழ் மீண்டும் சொல்லவும், "அப்படியா?? அப்போ நீ சொல்றது உணமைனா இனிமே என்னை உன் பிரெண்டா ஏத்துக்கோ...அப்போ நான் நம்பறேன்" என கையை நீட்ட, புன்னகையுடன் அவளின் கையை பற்றிய தமிழ், "பிரெண்ட்ஸ்" என சிரிக்க, அவளை கட்டிக்கொண்டாள் நித்யா.
அதன் பின் இருவரும் பேசியபடி வரவேற்பறையை சுத்தம் செய்து, மதிய உணவை டேபிளில் எடுத்து வைக்கவும் எல்லோரும் வந்து அமரவும் சரியாக இருந்தது.
நித்யாவும் தமிழும் சிரித்து பேசியபடி உணவை பரிமாற, பரத்தும் விசாலமும் தான் அதை ஆச்சர்யமாக பார்த்தனர்.
சாப்பிட்டு முடித்து எழுந்த ராம், கையை கழுவ வாஷ்பேசின் செல்ல, அங்கு நித்யா சொன்ன ஏதோ ஒரு காமெடியை கேட்டு வாய் விட்டு சிரித்து கொண்டிருந்த தமிழை கண்டு ஒரு நிமிடம் சொக்கி போய் நின்றான் ராம். அதற்குள் விசாலம் அழைக்க அங்கிருந்து தமிழ் நகரவும் வாஷ்பேசினை நோக்கி சென்ற ராம், அங்கு நின்றிருந்த நித்யாவிடம் கேட்டான்.
"என்ன ரெண்டு பெரும் பலமா சிரிச்சுட்டு இருந்திங்க?" எனவும் "ராம், நானும் தமிழும் இப்போ பிரெண்ட்ஸ் ஆயிட்டோம். சோ எங்களுக்குள்ள ஆயிரம் சீக்ரெட் இருக்கும் அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது" என அவனிடம் பழிப்பு காட்டிவிட்டு செல்ல, தமிழிடம் எப்படி நெருங்குவது என்று யோசித்து கொண்டிருந்த ராமிற்கு இப்போது ஒரு யோசனை தோன்றியது.
இரவு உணவு முடித்து மெல்ல அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள் இலக்கியா. உள்ளே வந்த பரத் இரவு உடைக்கு மாறிவிட்ட மெத்தை மேல் கிடக்க, பாட்டி அம்மாவுக்கு பின் இவன் வந்து ஒருமுறை அறிவுரை சொல்வான் என நினைத்து கொண்டிருந்த இலக்கியாவிற்கு அவன் எதுவும் பேசாமல் அமைதியா இருந்தது ஒரு அசவுகரிய உணர்வை தந்தது. சிறிது நேரம் நடந்தவள் அதற்க்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் அவனின் அருகே சென்று அமர்ந்தாள்.
"பரத் பரத்" கண்களை மூடி படுத்திருந்தவனை பிடித்து இலக்கியா உலுக்க, "ஹ்ம்ம்..." என்றான்
Continuosly checking for the updates on every Saturday
Hereafter dnt use chillzee
One of my favourite story. Ever Saturday I look forward for this story... Please update mam
Thank you and take care.